Azhi Soolntha Ulagile Song Lyrics in Tamil from Sivappu Manjal Pachai. Aazhi Soozhndha or Ivalin Kovam Song Lyrics by Mohan Rajan.
படத்தின் பெயர்: | சிவப்பு மஞ்சள் பச்சை |
---|---|
வருடம்: | 2019 |
பாடலின் பெயர்: | ஆழி சூழ்ந்த உலகிலே |
இசையமைப்பாளர்: | சித்து குமார் |
பாடலாசிரியர்: | மோகன் ராஜன் |
பாடகர்கள்: | ஸ்ரீகாந்த் ஹரிஹரன் |
பாடல் வரிகள்:
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே
இவன் அண்ணன் பாதி தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற நிலையை கடந்து
போனானே போனானே
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
உறங்கும் போதும் இவனின் கவனம்
உறங்கி போகாது
கனவில்கூட காவல் செய்யும்
கடமை மறவாது
உலகமே இவளெனே
இவன் வாழும் அழகை பாரடா
மகள் என வளர்க்கிறான்
இவன் உயரம் குறைந்த தாயடா
இவனின் அன்பை அளந்திட
எந்த மொழியும் போதாது
இவன் அண்ணன் பாதி தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற நிலையை கடந்து
போனானே போனானே
இவளின் கோபம் மௌனம் ஆகும்
எதுவும் பேசாது
இவளின் அழுகை அமிலம் ஆகும்
தாங்க முடியாது
இவனது விருப்பமே
தன் வாழ்க்கை என்று வாழ்கிறாள்
இவனிடம் தோற்பதும்
பெரும் வெற்றி என்று கொள்கிறாள்
இன்னும் இவனை குழந்தையாய்
பார்க்கும் இதயம் வாங்கினால்
இவள் அன்னை பாதி தங்கை மீதி
ஆனாளே ஆனாளே
அக்கா என்ற ஞாபகம் மறந்து
போனாளே போனாளே
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே
விரலினை தாண்டிடும்
நகமென இவன் பாசமே
கிரீடமா பாரமா
புரியுமா சில நேரமே
இவன் அண்ணன் பாதி தந்தை மீதி
ஆனானே ஆனானே
தம்பி என்ற நிலையை கடந்து
போனானே போனானே
ஆழி சூழ்ந்த உலகிலே
யாவும் அழகாச்சே
வயதை மீறிய வாழ்விலே
சிறு கவிதை உருவாச்சே