Thoppul Kodi Sontham Song Lyrics in Tamil from Vel Movie. Thoppul Kodi Sontham Ithu Song Lyrics Has Penned in Tamil by Hari.
படத்தின் பெயர்: | வேல் |
---|---|
வருடம்: | 2007 |
பாடலின் பெயர்: | தொப்புள்கொடி சொந்தம் |
இசையமைப்பாளர்: | யுவன் ஷங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | ஹரி |
பாடகர்கள்: | ஸ்ரீராம் பார்த்தசாரதி |
பாடல் வரிகள்:
ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு
ஓரம் போனதே
அண்ணன் தம்பி பாசம்
அது சோரம் போனதே
பாதையில தென்னம்புள்ள
பார்க்க யாருமில்ல
வேலியில நட்ட செடி
பூவ தேட நாதியில்ல
கண்ணுக்குள்ள விழுந்த
தூசி ஊசியானதே
பச்சை நெல்லு நாத்து
இப்போ பாசியானதே
இவன் நெஞ்சுக்குள்ள
வீரம் கொறஞ்சு போனதே
அட ரெட்ட புள்ள
ஒத்தையா பிரிஞ்சு போனதே
கட்டுத்தறி காள ஒன்னு
கலங்கி போனதே
கட்டு பட்ட உள்ளம் எல்லாம்
நொறுங்கி போனதே
பாசத்துல வந்த சொந்தம்
பாதியில போவதென்ன
நேசத்துல வந்த புள்ள
நெஞ்சம் இப்போ ஆனதென்ன
நம்பி வந்த மனசு இப்போ
நஞ்சு போனதே
தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு
தொலைஞ்சி போனதே
அத்துவிட்ட காயமது
ஆரிப்போனதே
யாரு செஞ்ச பாவம் இது
எந்த நெஞ்சு தாங்குறது
தாய் புள்ள பாசம் இது
எந்த சாமி சேக்குறது
கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம்
உண்மை ஆனதே
காஞ்சுபோன கண்ணீர் தடம்
ஈரமானதே
பெத்த தாய்க்கு பிள்ள பாசம்
மறந்து போனதே
அட காலம் செஞ்ச கோலம்
மாறிப்போனதே