Azhagai Pookuthe Song Lyrics in Tamil

Azhagai Pookuthe Song Lyrics in Tamil from Ninaithale Inikkum Movie. Azhagai Pookuthe Song Lyrics has penned in Tamil by Kalaikumar.

படத்தின் பெயர்:நினைத்தாலே இனிக்கும்
வருடம்:2009
பாடலின் பெயர்:அழகாய் பூக்குதே
இசையமைப்பாளர்:விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்:கலை குமார்
பாடகர்கள்:ஜானகி ஐயர், பிரசன்னா

Azhagai Pookuthe Lyrics in Tamil

பெண்: அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில்
சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

பெண்: அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில்
சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

பெண்: ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும்
மௌனம் பேசும்

பெண்: காதலன் கைச்சிறை
காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

ஆண்: அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில்
சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

பெண்: கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே

ஆண்: இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே

பெண்: சிலநேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன்
உன்னாலே…

பெண்: அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில்
சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

பெண்: ஒரு முறை நினைத்தேன்
உயிர்வரை இனித்தாயே
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே

ஆண்: சிறு துளி விழுந்து
நிறைகுடம் ஆனாயே
அரை கணம் பிரிவில்
நரை விழ செய்தாயே

பெண்: நீ இல்லாத நொடி முதல்
உயிர் இல்லா ஜடத்தைப்போல்
ஆவேனே…

ஆண்: அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
இருவரும்: அடடா காதலில்
சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

பெண்: அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில்
சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆண்: ஆசையாய் பேசிட
வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும்
மௌனம் பேசும்

பெண்: காதலன் கைச்சிறை
காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை
கண்டதாலே கண்ணில் ஈரம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *