Antha Neelakuyil Enna Solluthu Song Lyrics

Antha Neelakuyil Enna Solluthu Song Lyrics from Vettiya Madichu Kattu Movie. Antha Neelakuyil Enna Solluthu Song Lyrics penned by Pa.Vijay.

பாடல்:அந்த நீலக்குயில்
என்ன சொல்லுது
படம்:வேட்டிய மடிச்சுக்கட்டு
வருடம்:1998
இசை:தேவா
வரிகள்:பா.விஜய்
பாடகர்:மனோ, ஸ்வர்ணலதா

Antha Neelakuyil Enna Solluthu Lyrics

பெண்: அந்த நீலக்குயில்
என்ன சொல்லுது
ஆண்: கொஞ்சம் பக்கத்துல
வர சொல்லுது

பெண்: அந்த சோலை கிளி
என்ன சொல்லுது
ஆண்: சின்ன முத்தம் ஒன்னு
தர சொல்லுது

பெண்: அந்த நீலக்குயில்
என்ன சொல்லுது
ஆண்: கொஞ்சம் பக்கத்துல
வர சொல்லுது

பெண்: அந்த சோலை கிளி
என்ன சொல்லுது
ஆண்: சின்ன முத்தம் ஒன்னு
தர சொல்லுது

பெண்: உன் மச்சான் மச்சான்
அவன் கிறுக்கன்
நித்தம் நெஞ்சில் நெஞ்சில்
அந்த நெனப்பா

பெண்: என்று ஜோடிக்குயில்
கேட்கச் சொன்னது
உன்ன ஓரங்கட்டி
போக சொல்லுது

பெண்: அந்த நீலக்குயில்
என்ன சொல்லுது
ஆண்: உன்னை ஓங்கி ஒன்னு
வைக்க சொல்லுது

பெண்: பட்டாம்பூச்சி
எங்கே இருக்கு
ஆண்: தூண்டில் போடும்
உன் கண்ணுல

பெண்: தங்கச் சுரங்கம்
எங்கே இருக்கு
ஆண்: எட்டி சிரிக்கும்
உன் டாலரில்

பெண்: நீ கம்பரசம்
படித்ததுண்டா
ஆண்: அதை தினம் நான் ரசித்தேன்
உன் பேச்சிலே

பெண்: நீ சொர்க்கம்
அதை பார்த்ததுண்டா
ஆண்: அந்த சுகம் தான் இருக்கே
உன் நெஞ்சுல

பெண்: என் உச்சந்தலையில்
ஐஸ் வச்சிப்புட்டியே
ஆண்: உன் உச்சந்தலையில்
ஐஸ் வச்ச பிறகும்
இன்னும் முத்தத்தின்
சத்தத்தை காணும்

பெண்: இப்போ நீலக்குயில்
என்ன சொல்லுது
ஆண்: உன்னை குண்டுகட்டா
தூக்க சொல்லுது

பெண்: இப்போ சோலைக் கிளி
என்ன சொல்லுது
ஆண்: ஆசை தீரும் வரை
தம்கிரதக்க தம்கிரத தம்கிரத தா

ஆண்: போதை மருந்து எங்கே இருக்கு
பெண்: தொட்டு தழுவும் உன் கையில
ஆண்: ஏய் காமன் விருந்து எங்கே இருக்கு
பெண்: தேனை சுரக்கும் உன் லிப்புல

ஆண்: என் ரெண்டு கையும் எதுகிருக்கு
பெண்: என்ன பூபோல் ஏந்தி தாலாட்டதான்
ஆண்: இந்த வெட்டவெளி எதுகிறுக்கு
பெண்: நீ தனியா படுத்து டாடா டடா

ஆண்: நான் பசிச்சிருந்தும்
ரொம்ப படுத்துறியே
பெண்: கொஞ்சம் பொறுத்திருந்தா
மெல்ல இருட்டிவிடும்
நீ புசிக்க பழங்கள் தாரேன்

ஆண்: ச நான் என்னென்னவோ
நெனச்சு வந்தேன்
பெண்: நான் உன்ன மட்டும்
நினைச்சு வந்தேன்

ஆண்: நான் யார் முகத்தில்
முழிச்சு வந்தேன்
பெண்: நான் நரி முகத்தில்
முழிச்சு வந்தேன்

ஆண்: எப்போ மேகம் மேகம்
அது இருட்டும்
எந்தன் தாகம் தாகம்
அது தணியும்

பெண்: நம்ப வீடு ரொம்ப
பக்கத்துல தான்
ஆண்: ஆமாம் பையன் நடுவுல
முழிச்சுக்குவான்

பெண்: அய்யயோ அடுத்து மூன்று
தினம் வேறு வருதே
ஆண்: அப்போ மெத்தயிலே
ஒத்தையிலே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *