Aayiram Jannal Veedu Song Lyrics

Aayiram Jannal Veedu Song Lyrics in Tamil from Vel Movie. Aayiram Jannal Veedu Song Lyrics has penned in Tamil by Na.Muthukumar.

படத்தின் பெயர்:வேல்
வருடம்:2007
பாடலின் பெயர்:ஆயிரம் ஜன்னல் வீடு
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:ராகுல் நம்பியார்,
வடிவேலு, பிரேம்ஜி அமரன்

Aayiram Jannal Veedu Lyrics in Tamil

ஆண்1: ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

ஆண்1: அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண்2: ஏய் சுத்துறான் சுத்துறான்
காதுலதான் சுத்துறான்
வீசுறான் வீசுறான்
வலையத்தானே வீசுறான்

ஆண்1: பாசமான புலிங்க கூட
பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில்
படிக்கட்டா மாறலாம்

ஆண்&குழு: ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

ஆண்1: வீரபாண்டித் தேரப் போல
இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு
இவங்களப் போல் யாரு

ஆண்1: சித்தப்பாவின் மீசையப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்

ஆண்1: கோழி வெரட்ட வைரக்கம்மல்
கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட
கழுத்துச் செயின அவுப்பாங்க

ஆண்2: காட்டுறான் காட்டுறான்
கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான்
வாய ரொம்ப நீட்டுறான்

ஆண்1: சொந்த பந்தம் கூட இருந்தா
நெருப்புல நடக்கலாம்
குழு: வேலு அண்ணன் மனசுவச்சா
நெருப்பயே தாண்டலாம்

ஆண் & குழு: ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு

ஆண்1: சொக்கம்பட்டி ஊருக்குள்ள
ஒடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள அயிரமீனும்
சொல்லுது உன் பேரு

ஆண்1: சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி
நாட்டாமதான் யாரு யாரு
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும்
தாத்தாவோட பேரு

ஆண்1: வாசக்கதவு தொரந்தே இருக்கும்
வந்த சொந்தம் திரும்பாது
வேட்டையாடப் போனா ஐயா
நூறு சிங்கம் புடிப்பாரு

ஆண்2: ஐயோ வைக்கிறான் வைக்கிறான்
ஐசத்தூக்கி வைக்கிறான்
கத்துறான் கத்துறான் காரியமா கத்துறான்

ஆண்1: ஈரமுள்ள இதயம் இருந்தால்
ஈட்டியத்தான் தாங்கலாம்
குழு: வேலு அண்ணன் மனசவச்சா
இந்த வீட்டில் தங்கலாம்

ஆண் & குழு : ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

ஆண்1: அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண்2: கவுத்துட்டான் கவுத்துட்டான்
குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டான் போட்டுட்டான்
டேராவத்தான் போட்டுட்டான்

ஆண்1: பாசமான புலிங்க கூட
பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில்
படிக்கட்டா மாறலாம்

சிறுகுறிப்பு:

வேல் என்பது 2007 ஆம் ஆண்டு திரையான இந்திய தமிழ் மொழி அதிரடி திரைப்படம் ஆகும். இதனை ஹரி எழுதி இயக்க மோகன் நடராஜன் தயாரித்துள்ளார். இதில் சூரியா, அசின், கலாபவன் மணி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் வடிவேலு, லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், சரண் ராஜ், அம்பிகா மற்றும் நாசர் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். மேலும் பிரியான் ஒளிப்பதிவைக் கையாள வி.டி.விஜயன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 8 நவம்பர் 2007 அன்று வெளியானது. மேலும் அறிய

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *