Avaravar Valkaiyil Song Lyrics in Tamil from Pandavar Bhoomi Movie. Avaravar Valkaiyil Aayiram Aayiram Maatrangal Song Lyrics in Tamil.
படத்தின் பெயர்: | பாண்டவர் பூமி |
---|---|
வருடம்: | 2001 |
பாடலின் பெயர்: | அவரவர் வாழ்க்கையில் |
இசையமைப்பாளர்: | பரத்வாஜ் |
பாடலாசிரியர்: | சினேகன் |
பாடகர்கள்: | பரத்வாஜ் |
Avaravar Valkaiyil Lyrics in Tamil
ஆண்: அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
ஆண்: அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
ஆண்: அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
ஆண்: காற்றும் கூட எங்களுடன்
இரவினில் தூங்க இடம் கேட்கும்
மழைதுளி கூட என் தாயின்
மடியினில் தவழ தினம் ஏங்கும்
ஆண்: நத்தை கூட்டின் நீர் போதும்
எங்களின் தாகம் தீர்த்துகொள்வோம்
கத்தும் கடலும் கை கட்ட
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்
பெண்: தாயின் மடியில் தினம் இருந்து
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்
கனவினில் காலையில் ஒளி பெயர்த்து
சிறு சிறு சுகமாய் தினம் சிரிப்போம்
ஆண்: ஐந்தெழுத்து புது மொழியை
அறிய வைத்தாள் என் அன்னை
அண்ணன் தங்கை இருவருமே
நேசம் கொண்டு தமிழ் மண்ணை
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
ஆண்: அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
ஆண்: அன்னை ஊட்டிய பிடி சோற்றில்
ஆயுள் முழுக்க பசி மறந்தோம்
ஒற்றை கண்ணில் அடி பட்டால்
பத்து கண்ணிலும் வலி கண்டோம்
ஆண்: பள்ளிகூடம் தந்ததில்லை
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை
எங்கள் கதை போல் வேறொன்றை
பெண்: கண்களும் நீர் துளி கண்டதில்லை
அழுதிட அவைகளும் பழகவில்லை
கருப்பா சிவப்பா தெரியவில்லை
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை
ஆண்: சேகரித்து வைப்பதற்கு
தேவை என்று எதுவும் இல்லை
இறைவனுக்கும் எங்களுக்கும்
இடைவெளிகள் இருந்ததில்லை
நிலவுகள் சேர்ந்து பூமியில்
வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்
ஆண்: அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
ஆண்: அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலா காலம்
கனவினில் தினம் தினம் உலா போகும்
நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்
சிறுகுறிப்பு:
பாண்டவர் பூமி என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இது சேரன் எழுதி இயக்கியது. இப்படத்தில் அருண் விஜய், ஷமிதா, ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் வினு சக்ரவர்த்தி, முகேஷ் திவாரி, சந்திரசேகர், ரஞ்சித், மனோரமா மற்றும் சார்ல் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ் பிலிம்பேர் விருதை வென்றது. மேலும் அறிய.