Aatha Un Selai Song Lyrics in Tamil from Kutti Puli Movie. Aatha Un Selai Song Lyrics has penned in Tamil by Yegadesi and Music by Ghibran.
Aatha Un Selai Lyrics in Tamil
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பார்த்தாலே
சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னை
போத்த வேணும்
பார்த்தாலே
சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னை
போத்த வேணும்
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
பொட்டிக்குள்ள மடிச்சா
அது அழகு முத்து மால
காயம் பட்ட விரலுக்கு
கட்டு போடும் உன் சேல
நீ காத்திருக்கும் சேல
அது கண்ணீரு மணக்கும்
உன் சேல கட்டி எறைச்சா
தண்ணி சக்கரைய இனிக்கும்
என் உசுருக்குள்ள சேல
அது மயிலிறகா விரியும்
உன் வெளுத்த சேல திரிபோட்டா
வெளக்கு நல்லா எரியும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே
ஆத்தா ஆத்தா
ஆத்தா ஆத்தா
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
அக்கா கட்டி பழக
நான் ஆடுகட்டி மேய்க்க
ஓட்ட குடிசை வெயிலுக்கு
ஒட்டு போட்டு மறைக்க
என் கண்ணில் ஒரு தூசுபட்டா
ஒத்தனமும் கொடுக்கும்
அட கஞ்சிக்கொண்டு போன
சேல சும்மாடாக இருக்கும்
நான் தூங்கும் போது கூட
அது தலையணையா பேசும்
அட வெட்கை வரும் நேரம்
ஒரு விசிறி போல வீசும்
உன் சேலை தானே
பூஞ்சோலை தானே
ஆத்தா ஆத்தா
ஆத்தா ஆத்தா
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
ஆத்தா உன் சேல
ஆகாயம் போல
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
தொட்டில் கட்டி தூங்க
தூழி கட்டி ஆட
ஆத்துல மீன் புடிக்க
அப்பனுக்கு தல தொவட்ட
பார்த்தாலே
சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னை
போத்த வேணும்
செத்தாலும் என்னை
போத்த வேணும்