Vidikindra Poluthu Song Lyrics in Tamil

Vidikindra Poluthu Song Lyrics in Tamil Font from Raam Movie. Vidikindra Poluthu Song Lyrics are penned in Tamil by Snehan.

படத்தின் பெயர்:ராம்
வருடம்:2005
பாடலின் பெயர்:விடிகின்ற பொழுது
இசையமைப்பாளர்:யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:சினேகன்
பாடகர்கள்:ஸ்ரீ மதுமிதா

பாடல் வரிகள்:

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா

தொடுகின்ற தூரம்
எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம்
மரணத்தின் வாசல்

காதலும் ஓர்
ஆயுதமாய் மாறிடுச்சி
மெல்ல மெல்ல என்னை
கொல்ல துணிஞ்சிடுச்சி

தீயில் என்னை நிக்க
வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன்
நெஞ்சு கேட்கிறதே

காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா

யாரிடம் உந்தன்
கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும்
மௌனத்தில் கரையும்

பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லறையே பக்கமடா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *