Vizhiyile En Vizhiyile Song Lyrics in Tamil from Velli Thirai Movie. Vizhiyile En Vizhiyile Song Lyrics penned in Tamil by Pazhani Bharathi.
படத்தின் பெயர்: | வெள்ளித்திரை |
---|---|
வருடம்: | 2008 |
பாடலின் பெயர்: | விழியிலே என் விழியிலே |
இசையமைப்பாளர்: | GV பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | பழனி பாரதி |
பாடகர்கள்: | KS சித்ரா |
Vizhiyile En Vizhiyile Lyrics in Tamil
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன் பெயரை எழுதுதே
முத்தமிட்ட உதடுகள் உளருதே
நான் என்னை காணாமல்
தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில்
நமக்காக ஒரு மாலை சூடினேன்
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
இமைகளில் கனவுகளை
விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே
இங்கு வெறும் காற்றிலே
நான் விரல் நீட்டினேன்
உன் கைய்யொடு
கைசேரத்தான்
உன் உறவும் இல்லை
என் நிழலும் இல்லை
இனி என் காதல்
தொலைதூரம்தான்
நான் சாம்பல் ஆனாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும்
உனக்காக சில பூக்கள் பூக்குமே
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்புதே
உள்ளிருக்கும் இதயத்துக்கு
எனை புரியும்
யாருக்குத்தான் நம் காதல்
விடை தெரியும்
காதல் சிறகானது
இன்று சருகானது
என் உல் நெஞ்சு
உடைக்கின்றது
உன் பாதை எது
என் பயணம் அது
பனி திரை ஒன்று
மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி விளையாட
நாம் காதல் பொம்மையா
விழியிலே என் விழியிலே
கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்போதே