Unthan Rasigai Naanum Song Lyrics

Unthan Rasigai Naanum Song Lyrics in Tamil from Manmadhan Movie. Unthan Rasigai Naanum Song Lyrics has pennend in Tamil by Snehan.

படத்தின் பெயர்:மன்மதன்
வருடம்:2004
பாடலின் பெயர்:உந்தன் ரசிகை நானும்
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:சினேகன்
பாடகர்கள்:ஷாதனா சர்கம்

Unthan Rasigai Naanum Lyrics

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்

என்னை உனக்குள்ளே
தொலைத்தேன் ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி
ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும்
உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்கள்
கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம்
உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை

எத்தனை ஆண்கள்
கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம்
உன்னைப்போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்

நானும் ஓர் பெண் என
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்

அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு
காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

ஒரு முறை பார்த்தால்
பல முறை இனிக்கிற
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு
காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ

மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும்
மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும்
வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்
பேரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள

அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *