Anjara Manikk Ginger Soda Song Lyrics

Anjara Manikk Ginger Soda Song Lyrics in Tamil from Yaan Movie. Anjara Manikk Ginger Soda Song Lyrics has penned in Tamil by Kabilan.

படத்தின் பெயர்:யான்
வருடம்:2014
பாடலின் பெயர்:ஆத்தங்கரை ஓரத்தில்
இசையமைப்பாளர்:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்:கபிலன்
பாடகர்கள்:கானா பாலா, MC விக்கி

பாடல் வரிகள்

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

காத்தடிக்கும் திசையில என் மனச
கழுத்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கறிபோல
ஆறாய் முழுங்குறா ஆள

தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
ஒரு கரப்பான்பூச்சி போலே
என்ன கவுத்துபுட்டாளே

மோசமா கடிக்குற கண்ணாலே
பேசவே முடியல என்னாலே
அட இன்னொரு தடவ இதயம்
சுளுக்க இடுப்ப ஆட்டாதே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

கேர்ள் வி காட்ட ஷேக் இட்
பெண்ணே மாமா கிட்ட மூவ் தட்
நீ நடக்குற நடை உடை
ஐயோ என் மனசுல ஏதோ தடை

நான் என்ன தெருவுல
சுத்துற நாயா
இரவும் பகலும் என்ன
கல் அடிச்சு தொறத்துற
உங்க அப்பன் கிட்ட
என்ன அடி வாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற

உன்ன பாத்திடவே பாத்திடவே
நானும் வந்திருக்கே வந்திருக்கே
பெண்ணே ஒரு முறை காதல சொல்லு
உன்ன பிடித்திடவே பிடித்திடவே
நானும் வந்திருக்கே வந்திருக்கே
பெண்ணே காதுல காதல சொல்லு

வாய் பேசும் வாசனை கிளியே
ஊா் பேசும் ஓவிய சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ள
ஆயா சுட்ட வடகறி நீதானே

நீ போனா யாரடி எனக்கு
நீதானே ஜின் ஜினா ஜினுக்கு
அட அஞ்சர மணிக்கே
ஜிஞ்சொ் சோடா தரவா நான் உனக்கு

நான் பாா்த்த ஒருத்தல நீதானே
உன்னாலே தரதல நான்தானே
அட நெருப்புல விழுந்த ரேசன்
அாிசி புழுவென ஆனேனே

மங்காத்தா ராணிய பாத்தானே
கைமாத்தா காதல கேட்டானே
இந்த கோமளவள்ளி என்ன
தொட்டா குளிக்கவே மாட்டேனே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
பக்குனு பக்குனு பக்குனு

காலாலே அடுத்து கொலுசு
ஏலேலோ பாடுது மனசு
ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல
இழுக்குது அவ வயசு

ராசாத்தி என்னுடன் வாியா
ஏமாத்தி போவது சாியா
என்ன செளக்காா்பேட்ட பீடா போல
மெல்லுற அரைகொறையா

மன்னாதி மகனென இருந்தேனே
உன்னால தெருவுல பொறந்தேனே
என் வாடக சைக்கிளில் ஒருமுறை
வந்தா வானத்தில் பறப்பேனே

கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே
கண்ணாடி வளையலா சிணுங்காதே
உன்ன நம்பியே வந்த என்னையே
இப்போ நம்பியாா் ஆக்காதே

ஆத்தங்கரை கம்மாக்கரை
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

காத்தடிக்கும் திசையில என் மனச
கழுத்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கறிபோல
ஆறாய் முழுங்குறா ஆள

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *