Thumbi Thullal Song Lyrics in Tamil

Thumbi Thullal Song Lyrics in Tamil from Cobra Movie. Thumbi Thullal Song Lyrics has penned in Tamil by Vivek and composed by AR Rahman.

படத்தின் பெயர்:கோப்ரா
வருடம்:2020
பாடலின் பெயர்:தும்பி துள்ளல்
இசையமைப்பாளர்:ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்:விவேக்
பாடகர்கள்:நகுல் அபயங்கர்,
ஸ்ரேயா ஹோசல்
Thumbi Thullal Lyrics in Tamil

குழு: சடுகுடு சடுகுடு டி டி டி டி டம் டம டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ
மது மனமோ மதுமனமோ மதுமனமோ
மது மனமோ…

பெண்: தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ… ஜல ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே

பெண்: தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ… இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

குழு: சடுகுடு சடுகுடு டி டி டி டி டம் டம டம்
சடுகுடு டி டி டி டி டம் டம்
கொஞ்சும் சிந்தூர சிங்காரா கிண்ணார
பூந்தென்றலாய் வன்னூ

பெண்: கண் தூங்கும் நேரத்தில் நீ நீங்க கூடாது
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே
தொடும் எல்லாமே தீயென தீ மாற்றுமே
அதுபோல் தீண்ட நீ என நான் வேண்டுவேன்

பெண்: தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஓ… இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ

ஆண்: காரணங்கள் ஏதும் தெரியாமல்
நாட்கள் போக கண்டேனே
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே
ஓர் அர்த்தம் சேர்ந்ததே
ஒரு கணம் கூட விலகாமல் உயிராவேன்
இறுதி வரை கைகள் நழுவாமல் ஏந்துவேன்

பெண் குழு: ஆண் அழகன் காலு நம்ம பக்கம்
கண்ணு மட்டும் பேரழகி பக்கம்
ஆண் குழு: நம்ம சத்தம் காதில் விழ வில்லையே
வெடிக்கும் பீரங்கி கொண்டு வரணும்

பெண் குழு: நீங்க தர வேணும் நூறு புள்ள
ஆண் குழு: அய்யோ… போதவில்லை
பெண் குழு: உங்க பொறுப்பில் நம்ம
ஜனத்தொகை இருக்குது

பெண்: தும்பி தும்பி தும்பி துள்ளல்லோ
ஹா… இன்றோ இன்றோ தும்பி துள்ளல்லோ
ஓ ஹோ ஜல் ஜல் ஜல ஜல் மணியே
அவனிடம் இடை இறங்கிடு மணியே
தனியே தனியே தனியே
அவன் உலகினில் நான் மட்டும் தனியே
என் கள்ள சிரிப்பின் நீளம் நீயே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *