Annathe Sethi Song Lyrics in Tamil from Tughlaq Durbar Movie. Annathe Sethi Song Lyrics has penned in Tamil by Karthik Netha.
படத்தின் பெயர்: | துக்ளக் தர்பார் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | அன்னாத செய்தி |
இசையமைப்பாளர்: | கோவிந்த் வசந்தா |
பாடலாசிரியர்: | கார்த்திக் நேத்தா |
பாடகர்: | அறிவு |
பாடல் வரிகள்:
ஆண்: வா ஒரு வழி வந்தது
சூரிய விதைகளை பயிரிடுவோம்
கடுங் காட்டுல மேட்டுல
வெளிச்சத்த மச்சான் விரித்திடுவோம்
ஆண்: அட வேலியா மீறி
பிழம்பா நின்னுட்டோம்
மழ மழ மழவேனா
அடிமைகள் கண்ண முளிச்சுட்டோம்
ஆண்: அட கோட்டையில் ஏறிட
வேட்டைகள் யாவும் தொடங்கிட்டோம்
எழச்சவன் ஒளச்சவன் எழனும்
ஒதச்சவன் முதுகுல தரனும்
ஆண்: இரு கண்ணுல துடிக்குது பொரி பொரி
ஒருகையில யானைய உரி உரி
எவன் தந்தது தீமைய
அவன் அரசியல் மூளைய கிழி கிழித்திட
ஆண்: மர மண்டைய அறிவில பிளந்திட
அவன் தொண்டைய உரிமைகள் திறந்திட
உரப்படுவோம் மறப்படுவோம்
தலைமுறை எல்லாம் கொண்டாட புறப்படுவோம்
குழு: செய்தி மாறி போகட்டும்
இந்த செய்தி நிலையாகட்டும்
மேல கீழ தீரட்டும்
நம்ம பூமி புதிதாகட்டும்
குழு: செய்தி மாறி போகட்டும்
இந்த செய்தி நிலையாகட்டும்
மேல கீழ தீரட்டும்
நம்ம பூமி புதிதாகட்டும்
ஆண்: பங்காளி யார் சொன்னது
கடன் வாங்கி உயிர் வாழ்ந்துவிட
தினம் தூங்கி விட
அச்சம் கூச்சம் வெட்கம் கொண்டு
உயிர் வாழ்க என்று
ஆண்: யார் தந்தது எவன் தந்தது
நடு வீட்டிலே குடி வந்தது
சிரம் தாழ்த்தியே
கிட கிட அடி அடி என்று
ஆண்: ஏமாந்தவன் மாறனும் மாறனும்
அன்னந்தவன் ஏறனும் ஏறனும்
சுண்ணாம்புல வானவில் ஊத்தி
அடி அடி வண்ணங்கள் அள்ளனும்
ஆண்: விழி சேர்ந்திட விண்மீனும் சித்திக்கும்
கரம் சேர்ந்திட கண்ணீரும் தித்திக்கும்
குப்பனும் சுப்பனும் ஏக்கணும் ஏக்கணும்
என்னானு கேக்கணும்
குழு: ராமாயி கிருஷ்ணாயி ஏங்காதே எந்தாயி
எல்லாமே உனை வந்து சேரும்
புலி வேஷம் போட்டாலும் நாய் என்றும் உறும்பாதே
எதிர்த்தாலே எல்லாமே மாறும்
குழு: சோமாரி பெமானி வார்த்தைகள் உருமாறி
அன்னாத வந்தாச்சு செய்தி
அட கோமாளி ஏமாளி வேஷங்கள் தூளாகி
ராஜாளி இடமாச்சு சேரி
குழு: நீ பாதி நான் பாதி அதுதானே சமநீதி
வாடா டே பங்காளி
குழு: செய்தி மாறி போகட்டும்
இந்த செய்தி நிலையாகட்டும்
மேல கீழ தீரட்டும்
நம்ம பூமி புதிதாகட்டும்
குழு: செய்தி மாறி போகட்டும்
இந்த செய்தி நிலையாகட்டும்
மேல கீழ தீரட்டும்
நம்ம பூமி புதிதாகட்டும்