Silu Silu Vendru Poongatru Song Lyrics in Tamil from Vanamagan Movie. Silu Silu Vendru Poongatru Song Lyrics has penned by Madhan Karky.
படத்தின் பெயர்: | வனமகன் |
---|---|
வருடம்: | 2017 |
பாடலின் பெயர்: | சிலு சிலுவென்று |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | மதன் கார்க்கி |
பாடகர்கள்: | விஜய் யேசுதாஸ் |
பாடல் வரிகள்
சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று
கேளு கண்ணம்மா
அலை அலையாக
ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தை
பாரு கண்ணம்மா
மேல் கீழாக அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லும்
செல்லக்கண்ணம்மா
அன்பின் நிழல் வீசுதே
இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம்
இலை ஓடுதே
வெயில் வரம் தூறுதே
காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை
அரங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா
மேலே கிடையாதும்மா
சொற்கள் கொண்டு
சொன்னாலும் புரியாதம்மா
சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று
கேளு கண்ணம்மா
அலை அலையாக
ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா
முட்கள் கிழித்தாலுமே
மொத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே
சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே
காலம் இளைப்பாருமே
தெய்வம்கூட இங்கே
பசியாறுமே
இது நாம்தானடி
மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே போக
வழி சொல்லடி
சிலு சிலுவென்று
பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று
கேளு கண்ணம்மா
அலை அலையாக
ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப்
பாரு கண்ணம்மா
மேல் கீழாக அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லும்
செல்லக்கண்ணம்மா