Saara Kaatrae Song Lyrics in Tamil

Saara Kaatrae Song Lyrics in Tamil from Annaatthe Movie. Sara Sara Katre or Saral Saral Katre Song Lyrics penned in Tamil by Yugabharathi.

படத்தின் பெயர்:அண்ணாத்த
வருடம்:2021
பாடலின் பெயர்:சாரல் சாரல் காற்றே
இசையமைப்பாளர்:யுகபாரதி
பாடலாசிரியர்:D இமான்
பாடகர்கள்:சித் ஸ்ரீராம்,
ஸ்ரேயா கோஷல்

பாடல் வரிகள்

பெண்: சாரல் சாரல் காற்றே
சாரல் சாரல் காற்றே

பெண்: சாரல் சாரல் காற்றே
பொங்கி வழிகிறதே
சந்தோஷ ஊற்றே
ஆண்: சாரல் சாரல் காற்றே
அன்பை பொழிகிறதே
ஆனந்தக் கீற்றே

பெண்: சட சடன்னு
கண்ரெண்டும் தேன் தூவ
நனைகிறதே
என் ஆயுள் ரேகையே

ஆண்: பட படன்னு
கைரெண்டும் சீராட்ட
விழுகிறதே
நம் தோளில் மாலையே

பெண்: பச்சை மனது பால் நிறம்
மண்ணில் சிவந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே

ஆண்: திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா

ஆண்: திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா

பெண்: சாரல் சாரல் காற்றே
பொங்கி வழிகிறதே
சந்தோஷ ஊற்றே
ஆண்: சாரல் சாரல் காற்றே
அன்பை பொழிகிறதே
ஆனந்தக் கீற்றே

பெண்: யாழிசையும் ஏழிசையும்
உன் குரலோ ஓ
நீ நெருங்க பார்ப்பதுதான்
சொர்க்கங்களோ ஓ

ஆண்: தெய்வம் மறந்து கொடுத்திடாத
வரம் எத்தனை கோடியோ
அள்ளி கொடுக்க துணிந்த காதல்
அதை சொல்வது நீதியோ

பெண்: சித்தம் உனை யெண்ணி
சடுகுடு விளையாடுதே
புத்தம் புது வெட்கம்
புகுந்திட நடை மாறுதே

ஆண்: அந்தி பகலை மறந்து
உறவு நீள அன்பே நீ வந்தாயே

பெண்: சாரல் சாரல் காற்றே
பொங்கி வழிகிறதே
சந்தோஷ ஊற்றே
ஆண்: சாரல் சாரல் காற்றே
அன்பை பொழிகிறதே
ஆனந்தக் கீற்றே

பெண்: சிலு சிலுனு
பூந்தென்றல் சூடேற்ற
உயிரெனவே
பொன்னூஞ்சல் ஆடுதே

ஆண்: குளு குளுனு
தீ வெயில் தாலாட்ட
அடை மழையில்
என் ஆசை மூழ்குதே

பெண்: லட்சம் பறவை போல
என் உள்ளம் மிதந்து போகுதே
சற்றே இருண்ட வானிலை
உன் அழகை கண்டதுமே
மின்னொளி பெறுதே

ஆண்: திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா

ஆண்: திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா
திந்தாக்கு தகிந
திந்தாக்கு தகிந
தானே தானே தானா

பெண்: ஓ சாரல் சாரல் காற்றே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *