Puthukottai Bhuvaneswari Song Lyrics in Tamil

Puthukottai Bhuvaneswari Song Lyrics in Tamil from Rajakaliamman Movie. Puthukottai Bhuvaneswari Song Lyrics penned in Tamil by Kalidasan.

பாடல்:புதுக்கோட்டை புவனேஸ்வரி
படம்:ராஜகாளி அம்மன்
வருடம்:2000
இசை:SA ராஜ்குமார்
வரிகள்:காளிதாசன்
பாடகர்:KS சித்ரா

Puthukottai Bhuvaneswari Lyrics in Tamil

பெண்: புதுக்கோட்டை புவனேஸ்வரி
புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி
மண்ணடியின் மல்லீஸ்வரி
நங்கநல்லூர் ராஜேஸ்வரி
பாகேஸ்வரி யோகேஸ்வரி
லோகேஸ்வரி

குழு: மேல் மலையெனும்
அங்காள பரமேஸ்வரி

பெண்: உறையூரு வெட்க்காளி
உஜ்சையனி மாகாளி
சிறுவாச்சூர் மதுரகாளி
திருவற்கரை பத்ரகாளி
பத்ரகாளி ருத்ரகாளி நவகாளியே

குழு: எட்டுப்பட்டி ராஜகாளி
அம்மா தாயே

பெண்: நாச்சியம்மா பேச்சியம்மா
நாடியம்மா காரியம்மா
ஆலையம்மா சோலையம்மா
உண்ணாமுலையம்மா
என் மாங்கல்யம் நிலைத்திருக்க
அருள்வாய் நீயே

குழு: மைசூரு சாமுண்டியே
வருவாய் நீயே

பெண்: மகமாயி மாரியம்மா
திரிசூலி நீலியம்மா
முப்பாத்தம்மா பாளையத்தம்மா
முண்டகக்கன்னி திரௌபதியே
அங்காளம்மா ஆரணி படைவீட்டம்மா

குழு: அர்த்தநாரி தாயே
உன் அருள் காட்டம்மா

பெண்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஒரு அன்னை நீயே
குழு: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஒரு அன்னை நீயே

பெண்: எல்லோர்க்கும்
அருள் தரும் உந்தன் வரம்
உன் பிள்ளைக்கு
தர வேண்டும் தாலி வரம்

பெண்: பிள்ளையின் துன்பம்
அன்னையச் சேரும்
உன் விழிப் பார்த்தால்
என் துயர் தீரும்
நீ வைத்த குங்குமம்
அழிந்திடலாமோ

குழு: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஒரு அன்னை நீயே

பெண்: திருக்கடவூரின் அபிராமி
சிதம்பரத்தில் நீ சிவகாமி
திருப்பத்தூரின் பூமாரி
திருவேற்காட்டில் கருமாரி
குழு: தாயே

பெண்: மண்டைக்காட்டு பகவதியே
மயிலாப்பூரின் கற்பகமே
கொல்லூர் வாழும் மூகாம்பிகா
தக்ஷினேஸ்வரம் பவதாரிணி

பெண்: ஜகதாம்பா வடிவாம்பா
கனகாம்பா லலிதாம்பா
வாலாம்பா ஞானாம்பா
நாகாம்பா ஸ்வர்ணாம்பா

பெண்: சென்னியம்மா பொன்னியம்மா
கங்கையம்மா செஞ்சியம்மா
கோணியம்மா குலுங்கையம்மா
கன்னியம்மா துளசியம்மா

பெண்: ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா
பெரிய நாயகி
ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி
தாலி தந்த மங்களாம்பா
தையல் நாயகி
மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி

பெண்: ஓம் சக்தி ஓம் சக்தி தாயே
உலகாளும் ஓரு அன்னை நீயே

பெண்: நெல்லை நகர் காந்திமதி
எல்லையம்மா இசக்கியம்மா
மீனாட்சி காமாட்சி
தேனாட்சி திருப்பாட்சி
விருப்பாட்சி விசாலாட்சி தாயே அம்மா

குழு: காரைக்குடி நகர் வாழும்
உக்குடையம்மா

பெண்: பைரவியே வைஷ்ணவியே
அருக்காணி அழகம்மா
செல்லாயி சிலம்பாயி
கண்ணாத்தா சாரதாம்பா
பன்னாரி அம்மாவே பால சௌந்தரி

குழு: தேனாண்டாளே
எங்கள் குல தெய்வமே

பெண்: துர்க்கையம்மா குமரியம்மா
வேக்குளியம்மா கௌரியம்மா
கோல விழியம்மா முத்தாளம்மா
கஸ்தூரி வராஹியம்மா
நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா

குழு: பராசக்தி கொல்லிமலை
பாவையம்மா

பெண் : அபயாம்பிகை நீலாம்பிகை
அலமேலம்மா வழிகோலம்மா
நாராயணி தாக்ஷாயினி
கன்னிகா பரமேஸ்வரி
கனக துர்க்கையே
பவானி ஆவுடையம்மா
என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க
கண் பாரம்மா

பெண்: அம்மா… அம்மா…
அம்மா… அம்மா…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *