Oru Thaali Varam Song Lyrics in Tamil

Oru Thaali Varam Song Lyrics in Tamil from Purusha Lakshanam. Oru Thaali Varam Song Lyrics has penned in Tamil by Kalidasan.

பாடல்:ஒரு தாலி வரம்
படம்:புருஷ லட்சணம்
வருடம்:1993
இசை:தேவா
வரிகள்:காளிதாசன்
பாடகர்:KS சித்ரா

Oru Thaali Varam Lyrics in Tamil

கோல விழியம்மா
ராஜ காளியம்மா
பாளையத் தாயம்மா
பங்காரு மாயம்மா

முத்து மாரியம்மா
பத்ர காளியம்மா
முண்டக் கன்னியம்மா
எங்க சென்னியம்மா

குங்கும கோதையே
அன்னையே சோதையே
செந்தூர தெய்வானை
சிங்கார பூபதி

அன்னை விசாலாட்சி
செளடாம்பா விருப்பாட்சி
சுந்தர நீலியே
சௌந்தர மாளியே

வல்லியம்மா
எங்கள் அல்லியம்மா
தங்க செல்லியம்மா
செல்ல கொள்ளியம்மா

அடி அங்களாம்மா
எங்கள் செங்காலம்மா
அருள் முப்பாத்தம்மா
அனல் வெப்பாத்தம்மா

சிங்காரி ஓய்யாரி
சங்கரி உமையாம்பா
மண்மாரி பொன்மாரி
செல்லாயி சிலம்பாயி
மருவத்தூர் அம்மாவே வா

ஒரு தாலி வரம்
கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா
வேறு துணை யாரம்மா

ஒரு தாலி வரம்
கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா
வேறு துணை யாரம்மா

குத்தமில்லா
ஒரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு
அவர் கட்டிய தாலிக்கும்
பொட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு

நீதிக்கு கண் தந்து
சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மாற்றிடம்மா

மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
அம்மா மறு வாழ்வு
உன்னை கேட்கிறேன்
மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
அம்மா மறு வாழ்வு
உன்னை கேட்கிறேன்

ஒரு தாலி வரம்
கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா
வேறு துணை யாரம்மா

காணாத பொய் வழக்கு
வீணாக வந்திருக்கு
வாதாட சாட்சி ஏதம்மா
ஊர் வாழ ஆட்சி செய்யும்
மீனாட்சி தேவியம்மா
நான் வாழ நீதி கூறம்மா

சோதனையை வேதனையை
சேர்த்து விட்டேன் உன்னடியில்
சோகங்களை துரோகங்களை
தீர்த்துவிடு என் வழியில்

வாழ்வரசி ஆவதற்கு
தாலி தந்த கன்னியம்மா
வாசல் வந்த பிள்ளை மனம்
வாடலாமா பொன்னியம்மா
அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா
அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா

திருப்பத்தூர் கௌமாரி
திருவானைக்காவம்மா
மாங்காட்டு காமாட்சி
மலையாள பகவதி

தஞ்சாவூர் மாரியே
கன்யாகுமாரியே
மலையனூர் செண்பகம்
மயிலாப்பூர் கற்பகம்

கன்னிகா பரமேஸ்வரி
அன்னையே ஜெகதாம்பா
துளுக்கானத்தம்மாவே
துர்க்கை அம்மாவே

முக்குழி அம்மாவே
குளம்பி அம்மாவே
எல்லை அம்மாவே
கங்கை அம்மாவே

நாச்சியம்மா
தங்க பேச்சியம்மா
அன்னை மூகாம்பிகா
எங்கள் யோகாம்பிகா

அடி அலமேலம்மா
தாயே வரிக்கோலம்மா
தூய பச்சையம்மா
வீர படவேட்டம்மா

பைரவி வைரவி
தேனாட்சி திருப்பாட்சி
அம்மாயி பொம்மாயி
அழகம்மா கனகம்மா
ஆதி பராசக்தியே

ஓயாத சத்தியமும்
சாயாத சக்கரமும்
நீதானே பூமி மீதிலே
ஆத்தா நீ கண் திறந்து
பார்த்தாலே வஞ்சனைகள்
வீழாதோ உந்தன் காலிலே

பெண்ணினங்கள் வேண்டுவது
அன்னை உந்தன் குங்குமமே
குங்குமத்தில் நீ இருந்து
காக்கணும் என் மங்கலமே

சத்தியத்தை காக்க உந்தன்
சக்கரத்தை சுத்தி விடு
உக்கிரத்தில் நீ எழுந்து
உண்மைக்கொரு வெற்றி கொடு

உன் நீதி பூமியில் தவறாகுமா
என் வாழ்வில்
அது இன்னும் வெகு தூரமா

தாயே பெரியம்மா
தாலி தரும் அம்மா
தெப்ப குளத்தம்மா
தேரடி பூவம்மா

மங்களம் நீயம்மா
மந்தவெளி அம்மா
அர்த்தனாரியம்மா
அன்னை ஜோதியம்மா

வடிவுடையம்மாவே
திரிப்புரசுந்தரி
வேற்காடு மாயம்மா
கஸ்தூரி தாயம்மா

உருமாறி உலகம்மா
உருத்ரக்ஷா திலகம்மா
உண்ணாமுலை அம்மா
பன்னாரி அம்மாவே

மகேஸ்வரி
சர்ப்ப யாகெஸ்வரி
அடி லோகேஸ்வரி
நல்ல யோகேஸ்வரி

சக்தி ஜெகதீஸ்வரி
அன்னை பரமேஸ்வரி
எங்கள் புவனேஸ்வரி
தாயே ராஜேஸ்வரி

அபிராமி சிவகாமி
அருள்மாரி மகாமாயி
மாமுண்டி சாமுண்டி
பாஞ்சாலி அத்தாயீ
சோலையூர் மகாமாயி வா

ஒரு தாலி வரம்
கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா
வேறு துணை யாரம்மா

ஒரு தாலி வரம்
கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா
வேறு துணை யாரம்மா

குத்தமில்லா
ஒரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு
அவர் கட்டிய தாலிக்கும்
பொட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு

நீதிக்கு கண் தந்து
சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மாற்றிடம்மா

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *