Parthene Uyirin Vazhiye Song Lyrics in Tamil

Parthene Uyirin Vazhiye Song Lyrics in Tamil from Mookuthi Amman Movie. Parthene Uyirin Vazhiye Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.

படத்தின் பெயர்:மூக்குத்தி அம்மன்
வருடம்:2020
பாடலின் பெயர்: பார்த்தேனே உயிரின் வழியே
இசையமைப்பாளர்:கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
பாடலாசிரியர்:பா.விஜய்
பாடகர்:ஜெய்ராம் பாலசுப்ரமணியம்

பாடல் வரிகள்:

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா

எதில் நீ இருந்தாய்
எங்கோ மறைந்தாய்
உன்னைத் தேடி அலைந்தேன்
எனக்குள்ளேத் தெரிந்தாய்

இது போதும் எனக்கு
வேறு வரங்கள் நூறு வேண்டுமா
இறைவா இது தான் நிறைவா
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
ஓ ஓ கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா

வேதங்கள் மொத்தம் ஓதி
யாகங்கள் நித்தம் செய்து
பூஜிக்கும் பக்தி அதிலும்
உன்னைக் காணலாம்

பசி என்று தன் முன் வந்து
கை ஏந்தி கேட்கும் போது
தன் உணவைத் தந்தால் கூட
உன்னைக் காணலாம்

உன்னைக் காண பல கோடி
இங்கு வாரி இறைக்கிறார்கள்
எளிதாக உன்னை சேர
இங்கு யார் நினைக்கிறார்கள்

அலங்காரம் அதில் நீ இல்லை
அகங்காரம் மனதில் இல்லை
துளிக் கள்ளம் கபடம் கலந்திடாத
அன்பில் இருக்கிறாய்
உணர்ந்தேன் உனையே உனையே
மறந்தேன் எனையே எனையே

அகம் நீ ஜகம் நீ
அணுவான உலகின் அகலம் நீ
எறும்பின் இதய ஒளி நீ
களிரின் துதிக்கைக் கணமும் நீ

ஆயிரம் கை உண்டு என்றால்
நீ ஒரு கை தரக் கூடாதா
ஈராயிரம் கண் கொண்டாய்
உன் ஒரு கண் என்னைப் பாராதா
உன்னில் சரண் அடைந்தேன்
இனி நீ கதியே

பார்த்தேனே உயிரின் வழியே
யார் கண்ணும் காணா முகமே
கல் என்று நினைத்தேன் உனையே
நீ யார் என்று சொன்னாய் மனமே தான் நீயா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *