Un Perai Sollum Pothe Song Lyrics in Tamil

Un Perai Sollum Pothe Song Lyrics in Tamil from Angadi Theru Movie. Un Perai Sollum Pothe Song Lyrics has penned in Tamil by Na Muthukumar

படத்தின் பெயர்:அங்காடி தெரு
வருடம்:2010
பாடலின் பெயர்: உன் பேரை சொல்லும் போதே
இசையமைப்பாளர்:GV பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:ஹரிச்சரண், நரேஷ் ஐயர்,
ஸ்ரேயா கோஷல்

Un Perai Sollum Pothe Lyrics in Tamil

ஆண்: உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே
உயிர் வாழும் போராட்டம்

ஆண்: நீ பார்க்கும் போதே மழை ஆவேன்
ஓ உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன்
ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

பெண்: உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே
உயிர் வாழும் போராட்டம்

பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன்
ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

ஆண்: நீ பேரழகில் போர் நடத்தி
என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே
பார்வையாலே கடத்தி சென்றாய்

பெண்: நான் பெண்ணாக பிறந்ததற்கு
அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள்
நீயே தந்தாய்

ஆண்: என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்களோடு
என்னை தொடரும் கனவுகளோடு
பெண்ணே பெண்ணே

பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன்
ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

ஆண்: உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே
உயிர் வாழும் போராட்டம்

பெண்: ஓ நீ பார்க்கும் போதே மழை ஆவேன்
ஆண்:ஓ உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்

ஆண்: உன் கருங்கூந்தல் குழலாகதான்
எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடிதான்
ஜென்மம் தீரும்

பெண்: உன் மார்போடு சாயும்
அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த
வலிகள் தீரும்

ஆண்: உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதை தாண்டி ஒன்றுமே இல்லை
பெண்ணே பெண்ணே

ஆண்: நீ இல்லை என்றால் என் ஆவேன்
ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

இருவரும்: உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே
உயிர் வாழும் போராட்டம்

இருவரும்: நீ பார்க்கும் போதே மழை ஆவேன்
ஓ உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்
நீ இல்லை என்றால் என் ஆவேன்
ஓ நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *