ஓடக்கர ஓரத்திலே | Odakara Orathile Song Lyrics in Tamil

Odakara Orathile Song Lyrics in Tamil from Village Folk Songs. Odakara Orathile Song Lyrics has penned in Tamil by Anthony Daasan.

Odakara Orathile Song Lyrics in Tamil

தந்தான நானா நனனா
தந்தா நன நானா நானா
வந்தேனுன்னா
வாரேன்னுன்னாள்ளே
தம்பி அந்தோணி
சொந்தமா பாடெழுதி
பாடி வாரேன் நான்

ஓடக்கர ஓரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
உன்னோடு நான் ஒன்னா பேசணும்
அதனால என் கண்ணுக்கு முன்னே
வந்து நிக்க வேணும்

ஓடக்கர ஓரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
உன்னோடு நான் ஒன்னா பேசணும்
அதனால என் கண்ணுக்கு முன்னே
வந்து நிக்க வேணும்

ராப்பகலா தூக்கம் இல்லை
ராசாத்தி உன் நினைப்பு
போத்தி படுத்தாலும்
போகவில்லை உன் சிரிப்பு

ராப்பகலா தூக்கம் இல்லை
ராசாத்தி உன் நினைப்பு
போத்தி படுத்தாலும்
போகவில்லை உன் சிரிப்பு

நீ இருந்தா போதுமடி
நான் நித்தம் ஒரு பாட்டெழுத
கண்ணால் கண்டால்
பின்னால் மறையுற
பக்கம் வந்தாக்கா
அனல் பார்வை ஏனோ பாக்குற

நீ இருந்தா போதுமடி
நான் நித்தம் ஒரு பாட்டெழுத
கண்ணால் கண்டால்
பின்னால் மறையுற
பக்கம் வந்தாக்கா
அனல் பார்வை ஏனோ பாக்குற

ஓடக்கர ஓரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
உன்னோடு நான் ஒன்னா பேசணும்
அதனால என் கண்ணுக்கு முன்னே
வந்து நிக்க வேணும்

கண்ணுறங்கும் நேரமெல்லாம்
கண்மணியே உன் கனவா
கட்டி அணைக்குறேன்டி
தலையணைய உன் நினைவா

கண்ணுறங்கும் நேரமெல்லாம்
கண்மணியே உன் கனவா
கட்டி அணைக்குறேன்டி
தலையணைய உன் நினைவா

தாய் மடியை தேடுகின்ற
பிள்ளை போல உன் மடிய
அன்பாத்தானே
நானும் கேக்குறேன்
நீ தருவேன்னு
நான் சந்தோசமா எழுதி பாடுறேன்

தாய் மடியை தேடுகின்ற
பிள்ளை போல உன் மடிய
அன்பாத்தானே
நானும் கேக்குறேன்
நீ தருவேன்னு
சந்தோசமா எழுதி பாடுறேன்

ஓடக்கர ஓரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
உன்னோடு நான் ஒன்னா பேசணும்
அதனால என் கண்ணுக்கு முன்னே
வந்து நிக்க வேணும்

என் ராசாத்தி கண்ணுக்கு முன்னே
வந்து நிக்க வேணும்
என் ரோசாப்பூ கண்ணுக்கு முன்னே
வந்து நிக்க வேணும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *