என்னுடைய மச்சான் அவரு | Ennudaiya Machan Avaru Song Lyrics

Ennudaiya Machan Avaru Song Lyrics in Tamil from Nattupura Padalgal. Ennudaiya Machan Avaru Song Lyrics penned in Tamil by Kannagi.

Ennudaiya Machan Avaru Lyrics in Tamil

என்னுடைய மச்சான் அவரு
அந்த அய்யனார போல பவரு
என்னுடைய மச்சான் அவரு
அந்த அய்யனார போல பவரு

அவரு பெருமை சொல்ல
வார்த்தை இல்லை
என் மனசுக்குள்ள
மணக்கும் முல்லை

அட நித்தம் கண்ணு நினைக்குது
நெஞ்சுக்குழி இனிக்குது

என்னுடைய மாமன் அவருக்கும்
கருப்பசாமி போல வீரம் இருக்கும்
என்னுடைய மாமன் அவருக்கும்
கருப்பசாமி போல வீரம் இருக்கும்

அவரு அருமை சொல்ல
வார்த்தை இல்லை
அவர் அன்புக்குத்தான்
ஈடு இல்லை

அட நித்தம் கண்ணு நினைக்குது
நெஞ்சுக்குழி இனிக்குது

என்னுடைய மாமன் அவருக்கும்
கருப்பசாமி போல வீரம் இருக்கும்
என்னுடைய மச்சான் அவரு
அந்த அய்யனார போல பவரு

நான் களையெடுக்கும்
நேரத்துல
என் கைப்புடிச்சான்
தூக்கம் இல்லை

அட உசிர் இருந்தும்
என் உடம்புக்குள்ள
அவன் நினைவில்லையே
எதுவும் விளங்கவில்லை

எனக்கு எல்லாம் மாமனே
விட்டா இன்னும் சொல்வேனே
எனக்கு எல்லாம் மாமனே
விட்டா இன்னும் சொல்வேனே

என்னுடைய மச்சான் அவரு
அந்த அய்யனார போல பவரு
என்னுடைய மச்சான் அவரு
அந்த அய்யனார போல பவரு

நான் நாத்து நடும் வேலையில
என்னை மறைஞ்சிருந்து பாத்தவரு
நான் மனசொடஞ்ச நேரத்துல
என்ன மாரோட அணைச்சவரு

எனக்கு எல்லாம் மாமனே
விட்டா நானும் சொல்வேனே
எனக்கு எல்லாம் மாமனே
விட்டா நானும் சொல்வேனே

என்னுடைய மாமன் அவருக்கும்
கருப்பசாமி போல வீரம் இருக்கும்
என்னுடைய மாமன் அவருக்கும்
கருப்பசாமி போல வீரம் இருக்கும்

அவரு அருமை சொல்ல
வார்த்தை இல்லை
அவர் அன்புக்குத்தான்
ஈடு இல்லை

அட நித்தம் கண்ணு நினைக்குது
நெஞ்சுக்குழி இனிக்குது

என்னுடைய மச்சான் அவரு
அந்த அய்யனார போல பவரு
என்னுடைய மச்சான் அவரு
அந்த அய்யனார போல பவரு

அவரு பெருமை சொல்ல
வார்த்தை இல்லை
என் மனசுக்குள்ள
மணக்கும் முல்லை

அட நித்தம் கண்ணு நினைக்குது
நெஞ்சுக்குழி இனிக்குது

தந்தனன தந்தனனனா
தன தந்தனன தந்தனனனா
தந்தனன தந்தனனனா
தன தந்தனன தந்தனன
நானன்ன நானன்ன நானன்னனா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *