எப்பத்தான் வருவீங்க | Eppathan Varuvinga Song Lyrics in Tamil

Eppathan Varuvinga Song Lyrics in Tamil from Nattupura Padalgal. Eppathan Varuvinga Song Lyrics has sung in Tamil by Rajalakshmi.

Eppathan Varuvinga Song Lyrics in Tamil

மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்
ஆச மச்சானே
இந்த அழகு சில
உம் மேல தான்
நேசம் வச்சேனே

மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்
ஆச மச்சானே
இந்த அழகு சில
உம் மேல தான்
நேசம் வச்சேனே

நான் பூ முடிஞ்சேன்
பொட்டு வச்சேன்
உறவுக்காக தான்
நான் கண்விழித்து
காத்திருந்தேன்
வரவுக்காக தான்

எப்பத்தான் வருவீங்க
உள்ளம் ஏங்குது
அந்த ஒரு நொடிக்காக
உசுரு வாழுது

எப்பத்தான் வருவீங்க
உள்ளம் ஏங்குது
அந்த ஒரு நொடிக்காக
உசுரு வாழுது

உனக்காக காத்திருந்தேன்
நெடு நேரம்தான்
நான் தூங்கி ஆனதையா
பல காலம் தான்

மாமன் பொண்ணு அத்தை மகன்
முறை சேரத்தான்
நம்மோட ஆசை எல்லாம்
நிறை வேரத்தான்

என் உடலும் உசுருமா
ஒட்டிக்கொண்ட மாமனே
என்னை தட்டி கழிச்சாலும்
நீ எனக்கு காவலே

உன்ன நெஞ்சில நெனைச்சும்
மஞ்சள குளிச்சும்
மஞ்சத்தில் வாழுறேன்

எப்பத்தான் வருவீங்க
உள்ளம் ஏங்குது
அந்த ஒரு நொடிக்காக
உசுரு வாழுது

நூறாண்டு காலம்
நம்ம புகழ் வாழனும்
என்னாச ராச
இங்கே எனையாளனும்

வள்ளுவனும் வாசுகிய
போல் வாழனும்
வாழ்க்கையில நீயும்
நல்ல துணையாகனும்

உன்ன கட்டிக்கிறேனைய்யா
நீ என் புருசனா
நீ இருக்கும் இடமெல்லாம்
எனக்கு அரசனா

வரும் சித்திரை மாசத்தில்
முத்தத்தை கொடுத்து
முத்திரை பதிக்கத்தான்

எப்பத்தான் வருவீங்க
உள்ளம் ஏங்குது
அந்த ஒரு நொடிக்காக
உசுரு வாழுது

தந்தனா நனனானே
தன்னேனானனே
தந்தனா நனனானே
தன்னேனானனே

தனனே தனனே
தனனே தனனே

1 thought on “எப்பத்தான் வருவீங்க | Eppathan Varuvinga Song Lyrics in Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *