Nee Singam Thaan Song Lyrics in Tamil

Nee Singam Thaan Song Lyrics in Tamil from Pathu Thala Movie. Nee Singam Than or Nee Singam Thaan Song Lyrics has penned in Tamil by Vivek.

பாடல்:அந்த ஆகாயம் போதாத
படம்:பத்து தல
வருடம்:2023
இசை:AR ரகுமான்
வரிகள்:விவேக்
பாடகர்:சித் ஸ்ரீராம்

Nee Singam Thaan Lyrics in Tamil

ஆண்: சுற்றி நின்றே ஊரே பார்க்க
களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ
ரணம் காண்பான்

ஆண்: உன் பேரை சாய்க்க
பல யானைகள் சேர்ந்த போதே
நீ சிங்கம்தான்

ஆண்: அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

ஆண்: கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஆண்: தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான்

ஆண்: அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

ஆண்கள்: கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஆண்: ஏ பார் என்ற தேருக்குள்
ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனாலும்
என்ன சொல்

ஆண்: மழைக்காற்று
மான்குட்டி போலே
சுயமின்றி வாழ்வான்
மண்மேல

ஆண்: உன் நிலத்தின் மலரை
நீயும் சிறையினில் இடலாம்
அதன் நறுமணம்
எல்லையை கடந்து வீசும்

ஆண்கள்: அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

ஆண்கள்: கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஆண்: உறவோ யார் என
நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால்
சரிதம் ஆழமாய்
காலங்கள் பேனாலும் பேசும்

ஆண்: அது யாரென்ற முடிவு
இங்கு யாரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை

ஆண்கள்: புகழ் வந்தாலும்
அது கூட கடன் தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே
தியாகம் என்பேன்

ஆண்கள்: நிலவின் ஏணி நீ
விளக்கென்று ஆனாலும்
இரவை கேட்காமல்
நிலவொளி வீசும்

ஆண்கள்: தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் இந்த அந்த
தீ போலத்தான்

Pathu Thala Movie Song Lyrics

Male: Suttri Nindru Oore Paarkka
Kalam Kaanban
Punnagaiyil Senai Vaazha
Ranam Kaanban

Male: Un Perai Saaikka
Pala Yaanaigal Serntha Podhe
Nee Singam Dhaan

Male: Andha Aagayam Podhatha
Paravai Ondru
Nadhi Kannadi Paarthu
Manam Nirainthathu Indru

Male: Kadalal Theeratha
Erumbin Dhaagangal
Ilaiyin Melaadum
Panithuli Theerkkum

Male: Theeyai Nee Pagirnthaalum
Rendaai Vaazhum
Ivanum Andha Thee Pola Thaan

Male Chorus: Andha Aagayam Podhatha
Paravai Ondru
Nadhi Kannadi Paarthu
Manam Nirainthathu Indru

Male Chorus: Kadalal Theeratha
Erumbin Dhaagangal
Ilaiyin Melaadum
Panithuli Theerkkum

Male: Ye Paar Endra Therukkul
Oorkolangal
Ther Yaar Sondham
Aanal Than Enna Sol

Male: Malai Kaatru
Maan Kutti Pole
Suyam Indri Vaazhvan
Man Mele

Male: Un Nilathin Malarai
Neeyum Siraiyinil Idalam
Adhan Narumanam Ellaiyai
Kadanthu Veesum

Male Chorus: Andha Aagayam Podhatha
Paravai Ondru
Nadhi Kannadi Paarthu
Manam Nirainthathu Indru

Male Chorus: Kadalal Theeratha
Erumbin Dhaagangal
Ilaiyin Melaadum
Panithuli Theerkkum

Male: Uravo Yaar Ena
Neeyum Ketkalaam
Oorellam Sondham Kondaadum
Silarin Bedhathal
Saritham Aazhamaai
Kaalangal Ponaalum Pesum

Male: Adhu Yaar Endra Mudivu
Ingu Yaarodum Illai
Adhu Nee Endru Ninaithaal
Nee Iraivan Kai Pillai

Male Chorus: Pugal Vanthaalum
Adhu Kooda Kadan Than Indru
Avan Kreedathai Thanthaale
Thiyaagam Enben

Male Chorus: Nilavin Yeni Nee
Vilakkendru Aanalum
Iravai Ketkamal Nilavoli Veesum

Male Chorus: Theeyai Nee Pagirnthaalum
Rendaai Vaazhum
Ivanum Andha Thee Pola Thaan

Short Info

பத்து தல என்பது 2023 ஆம் ஆண்டு வெளி வந்த இந்திய தமிழ் மொழி அதிரடி சண்டை திரைப்படமாகும். இதனை Obeli N.கிருஷ்ணா இயக்கியுள்ளார். இது 2017 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான முஃப்தியின் மறுஆக்கம் ஆகும். இப்படத்தில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன், Teejay அருணாசலம் மற்றும் அனு சித்தாரா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு AR ரஹ்மான் இசையமைக்க விவேக், கபிலன், சினேகன், நாட்டு ராஜா துரை ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். மேலும் அறிய wikipedia

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *