Kannin Maniye Song Lyrics has penned in Tamil by Vaali. Kannin Maniye Song Lyrics in Tamil from Manathil Uruthi Vendum Movie.
படத்தின் பெயர்: | மனதில் உறுதி வேண்டும் |
---|---|
வருடம்: | 1987 |
பாடலின் பெயர்: | கண்ணின் மணியே |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | KS சித்ரா |
பாடல் வரிகள்:
கண்ணின் மணியே
கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பலம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள்தோறும் வாடும் ஊமைகள் தானா
கண்ணின் மணியே
கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன நீரோட்டமா
சாத்திரங்கள் பெண்
இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில்
பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண்
இனத்தை மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில்
பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே
நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும்
ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான்
இப்போதும் ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற
சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை
கண்ணின் மணியே
கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பலம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள்தோறும் வாடும் ஊமைகள் தானா
கண்ணின் மணியே
கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன நீரோட்டமா
பாய் விரிக்கும் பாவை
என்ன காதல் பதுமைகளா
தினம் ஏவள் செய்ய
ஆடவர்க்கு காவல் அடிமைகளா
பொன் அள்ளி வைத்தால்தானே
பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம்
பொல்லாத தனிமை கோலம்
எரிகின்ற நேரத்தில்
அணைக்கின்ற கை இல்லை
சொல்கின்ற வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்தப்படி
கலங்குது மயங்குது பருவக்கொடி
கண்ணின் மணியே
கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பலம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள்தோறும் வாடும் ஊமைகள் தானா
கண்ணின் மணியே
கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன நீரோட்டமா