Sanga Tamil Kaviye Song Lyrics has penned in Tamil by Vaali. Sanga Tamil Kaviye Song Lyrics in Tamil from Manathil Uruthi Vendum Movie.
படத்தின் பெயர்: | மனதில் உறுதி வேண்டும் |
---|---|
வருடம்: | 1987 |
பாடலின் பெயர்: | சங்கத்தமிழ் கவியே |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள்: | KJ யேசுதாஸ், KS சித்ரா |
பாடல் வரிகள்
ஆண்: சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ
பெண்: சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ
ஆண்: சங்கத்தமிழ் கவியே ஏ
பெண்: மாதுளம் பூவிருக்க
அதற்குள் வாசனை தேனிருக்க
ஆண்: பாதியை நான் எடுக்க
மெதுவாய் மீதியை நீ கொடுக்க
பெண்: காதலன் கண்ணுறங்க
தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஆண்: ஒரு புறம் நான் அணைக்க ஆ
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க
பெண்: சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்
சங்கத்தமிழ் கவியே ஏ
சங்கத்தமிழ் கவியே
பெண்: பூங்குயில் பேடைதனை
சேரத்தான் ஆண் குயில் பாடியதோ
ஆண்: ஓடத்தைப்போல் நானும்
ஆடதான் ஓடையும் வாடியதோ
பெண்: காதலன் கை தொடத்தான்
காதலன் கை தொடத்தான்
இந்த கண்களும் தேடியதோ
ஆண்: நீ வரும் பாதையெல்லாம்
அங்கங்கே பார்வையை ஓடவிட்டேன்
ஆண்: நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓடவிட்டேன்
பெண்: தோழியர் யாவரும் கேலிகள் பேச
தினம் தினம் நான் தவித்தேன்
ஆண்: சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ
பெண்: சங்கத்தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தனந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ
ஆண்: சங்கத்தமிழ் கவியே ஏ