கண்ணான கண்ணே | Kannana Kanne Song Lyrics in Tamil

Kannana Kanne Song Lyrics in Tamil from Viswasam Movie. Kannana Kanne Song Lyrics penned in Tamil by Thamarai. கண்ணான கண்ணே பாடல் வரிகள்.

பாடல்:கண்ணான கண்ணே
படம்:விஸ்வாசம்
வருடம்:2018
இசை:இமான்
வரிகள்:தாமரை
பாடகர்:சித்ஸ்ரீராம்

Kannana Kanne Lyrics in Tamil

கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா

நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா

தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..

அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே….

புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை

விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
எனை ஏதோ பயம் கூடும்

மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி

கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ

கண்ணானா கண்ணே
கண்ணானா கண்ணே

Short Notes

கண்ணானா கண்ணே” என்ற பாடலானது 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “விஸ்வாசம்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “அஜித் குமார், நயன்தாரா, விவேக், யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் திரைக்கதையினை சிவா எழுதி இயக்கியுள்ளார். TG தியாகராஜன் படத்தினை தயாரித்துள்ளார்.

இதனை வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொண்டுள்ளார்.

D இமான் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணியை இசையமைத்துள்ளார். விவேகா, தாமரை, யுகபாரதி, அருண் பாரதி ஆகியோர் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.

ஹரிஹரன், சித் ஸ்ரீராம், சங்கர் மஹாதேவன், ஸ்ரேயா கோஷல், அந்தோணி தாசன் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது 10 ஜனவரி 2019 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் விஸ்வாசம் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *