Kambathu Ponnu Song Lyrics in Tamil

Kambathu Ponnu Song Lyrics in Tamil from Sandakozhi 2 Movie. Kambathu Ponnu Song Lyrics has written in Tamil by Yegathesi.

படத்தின் பெயர்சண்டைக்கோழி 2
வருடம்2018
பாடலின் பெயர்கம்பத்து பொண்ணு
இசையமைப்பாளர்யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்ஏகாதேசி
பாடகர்யுவன் சங்கர் ராஜா
பாடல் வரிகள்:

கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி பறக்கத் தாக்குற

ஆலமரத்து இலடா
அவ கன்ன குழியில விழடா
பாம்பாட்டம் ரெட்டை சடடா
இப்போ பாக்குது என்ன தொடடா

அட டா டா…
மஞ்ச செவப்பு கண்ணாடிப் போல
என்ன நீ சாய்க்காதே
அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மெய்க்காத

போடி போ தாங்கல
ராத்திரி பூராந் தூங்கல
கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…

கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி பறக்கத் தாக்குற

தாவணி காத்துதான் வாழுற மூச்சடி
பேசுன பேச்செல்லாம் சக்கர ஆச்சடி
அம்மிய அறைகிற ஆளா நீ அசதுர
மின்னல கண்ணுல வாங்கி
மின்சாரத்தப் பாச்சுர

சவுமிட்டையு வாட்சப் போல
என்னதான் கட்டிக்கிட்டா
அடி குச்சி ஐஸ் கரைய போல
சட்டையில ஒட்டிக்கிட்ட
கடுங்காபி இதம் போல
மனச நீதான் ஆத்துற

கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…

ராட்டினம் போலத்தான்
தூக்கி நீ சுத்துற
மெல்லுறன் முழுங்கறேன்
வார்த்தையே சிக்கல

கையில பேசுற
கண்ணுல கேக்குற
காதுல கம்மல போல
மனச நீயும் ஆட்டுர

பஞ்சு மிட்டைய ரெண்டா திருடி
கன்னத்தை செஞ்சுக்கிட்ட
அடி ஈசல் ரேகையை பிச்சு வந்து
இதயத்தை நெஞ்சுகிட்ட

ஆத்தாடி காத்துல
உன் பெயரைத்தான் கூவறேன்…
கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…

கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…
கண்ணால வெட்டித் தூக்கற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி பறக்கத் தாக்குற

கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…
கம்பத்து பொண்ணு…

பாடலின் விவரங்கள்:

கம்பத்து பொண்ணு என்னும் பாடலானது சண்டக்கோழி 2 என்னும் தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலானது 2018-ம் ஆண்டு சோனி மியூசிக் சவுத் வெவோ என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது. இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை ஏகாதேசி இயற்றியுள்ளார்.

படத்தின் விவரங்கள்:

சண்டக்கோழி 2 என்னும் திரைப்படத்தினை என்.லிங்குசாமி இயக்கியுள்ளார். இந்த படமானது 2018-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் நாள் திரையிடப்பட்டது. இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், கஞ்சா கருப்பு முதலானோர் நடித்துள்ளனர். இப்படம் முழுமைக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படமானது ஒரு சண்டை படமாகும். மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *