Onnavitta Yaarum Yenakilla Song Lyrics

Onnavitta Yaarum Yenakilla Song Lyrics in Tamil from Seemaraja Movie. Unna Vitta Yarum Enakilla Song Lyrics penned in Tamil by Yugabharathi.

படத்தின் பெயர்சீமராஜா
வருடம்2018
பாடலின் பெயர்ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல
இசையமைப்பாளர்டி.இமான்
பாடலாசிரியர்யுகபாரதி
பாடகர்ஸ்ரேயா கோஷல், சத்ய பிரகாஷ்

பாடல் வரிகள்:

பெண்: ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

ஆண்: அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில வெளியில…

ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண்: ஆ….ஆ….

ஆண்: ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண்: ஆ… ஆ… ஆ…
உறவாக நீயும் சேர
உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு
நிலவுல போடவேணும் கூத்து

ஆண்: அடியே கூட்ட தாண்டி
பறந்து வா வெளியில
வெளியில வெளியில…

பெண்: வானம் நீ வந்து நிக்க
நல்லபடி விடியுமே விடியுமே
பூமி உன்
கண்ணுக்குள்ள சொன்னபடி
சொழலுமே சொழலுமே

ஆண்: அந்தி பகல் ஏது
ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச
பத்தலயே நாளே

பெண்: மனசே தாங்காம
நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை
நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்

ஆண்: ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண்: ஆ… ஆ… ஆ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

ஆண்: நேக்கா நீ கண் அசைக்க கண்டபடி
மெதக்குறேன் மெதக்குறேன்
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர
எடுக்குறேன் எடுக்குறேன்

பெண்: ஒத்த நொடி நீயும்
தள்ளி இருந்தாலே
கண்ண இவ மூடி
போயிடுவேன் மேலே

ஆண்: கடலே காஞ்சாலும்
ஏழு மலையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே

பெண்: ஆ… ஆ… ஆ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

ஆண்: ஓ… ஓ… ஓ…
ஒன்ன விட்ட யாரும்
எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன்
நானும் உனக்குள்ள

பெண்: ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ…

பாடலின் விவரங்கள்:

ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல என்கிற பாடலானது சீமராஜா என்னும் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப்பாடலுக்கு இமான் இசையமைத்துள்ளார். இதனை ஸ்ரேயா கோஷல் மற்றும் சத்ய பிரகாஷ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலின் வரிகளை யுகபாரதி இயற்றியுள்ளார். இந்த பாடலானது 2018-ம் ஆண்டு திங்க் மியூசிக் இந்தியா என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது.

படத்தின் விவரங்கள்:

சீமராஜா என்னும் திரைப்படத்தினை பொன்ராம் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தினை ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *