Kadhal Kanava Song Lyrics in Tamil from Kochadaiyaan Movie. Manapennin Sathiyam or Kadhal Kanava Song Lyrics penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | கோச்சடையான் |
---|---|
வருடம்: | 2014 |
பாடலின் பெயர்: | காதல் கணவா |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | லதா ரஜினிகாந்த் |
Kadhal Kanava Song Lyrics in Tamil
காதல் கணவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
வாழை மரம் போல
என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல
ரகசியம் காப்பேன்
கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண்ணவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில்
பார்த்திட செய்வேன்
மழை நாளில் உன் மார்பில்
கம்பளி ஆவேன்
மாலை காற்றை தலை கோதி
நித்திரை தருவேன்
காதல் கணவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
உனது உயிரை எனது வயிற்றில்
ஊற்றி கொள்வேன்
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்கு தருவேன்
கால மாற்றம் நேரும் போது
கவனம் கொள்வேன்
கட்டில் அறையில் சமையல் அறையில்
புதுமை செய்வேன்
அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன்
உன் ஆண்மை நிறையும் போது
உந்தன் தாய் போல் இருப்பேன்
உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்
காதல் கணவா
உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது
தூய்மையான என் சத்தியம்
புனிதமானது