Mugathai Eppothum Moodi Vaikathe Song Lyrics

Mugathai Eppothum Moodi Vaikathe Song Lyrics from Thottal Poo Malarum Movie. Mugathai Eppothum Moodi Vaikathe Song Lyrics penned by Vaali.

படத்தின் பெயர்:தொட்டால் பூ மலரும்
வருடம்:2007
பாடலின் பெயர்:முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:ஹரிசரண்

பாடல் வரிகள்

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முள்ளை தைக்காதே

என் கண்மணி காதோடு சொல்
உன் முகவரி ஓ ஓ
எந்நாளுமே என் பாட்டுக்கு
நீ முதல் வரி ஹே ஹே ஹே

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முள்ளை தைக்காதே

அரபு நாடே அசந்து நிற்கும்
அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின்
கவிதையா ஹே ஹே ஹே

ஏ உன்னுடைய நெற்றி
உன்னை பற்றி கூறுதே
உள்ளிருக்கும் பொட்டு
உந்தன் குட்டு சொல்லுதே

என்னுடைய பார்வை
கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ
எனக்கிருக்கும் சக்தி
பராசக்தி புரிஞ்சுக்கோ

கால் கொலுசு தான்
கல கலக்குது
கையின் வளையல்
காது குளிர கானம் பாட

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முள்ளை தைக்காதே

போட்டிருக்கும் கோஷா
வேஷம் பேஷா பொருந்துதே
பெண் அழகு மொத்தம்
காண சித்தம் விரும்புதே

வெண்ணிலாவின் தேகம்
மூடும் மேகம் விலகுமா
வண்ண உடல் யாவும்
காணும் யோகம் வாய்க்குமா

கொஞ்சம் கொழுப்பு
கொஞ்சம் திமிரு
எனக்கும் இருக்கு
உனக்கு மேலே அன்பு தோழி

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முள்ளை தைக்காதே

அரபு நாடே அசந்து நிற்கும்
அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாமின்
கவிதையா ஹே ஹே ஹே

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முள்ளை தைக்காதே

என் கண்மணி காதோடு சொல்
உன் முகவரி ஓ ஓ
எந்நாளுமே என் பாட்டுக்கு
நீ முதல் வரி ஹே ஹே ஹே

முகத்தை எப்போதும்
மூடி வைக்காதே
எனது நெஞ்சத்தில்
முள்ளை தைக்காதே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *