Kaadu Malai Kadanthu Vanthom Song Lyrics in Tamil from Ayyappan Songs. Kaadu Malai Kadanthu Vanthom Song Lyrics sung in Tamil by Veeramani.
Kaadu Malai Kadanthu Vanthom Lyrics in Tamil
ஐயப்பா சாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா
காடு மலை
கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண நாங்கள்
ஓடி வந்தோம் ஐயப்பா
மாய வீடுதனை
மறந்து வந்தோம் ஐயப்பா
சபரி வீடுதனைத்
தேடி வந்தோம் ஐயப்பா
நெய்யபிஷேகம் பாலபிஷேகம்
தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம்
எங்கள் ஐயப்ப சாமிக்கே
காடு மலை
கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண நாங்கள்
ஓடி வந்தோம் ஐயப்பா
ஏட்டினிலே
எழுத வைத்தாய் ஐயப்பா
எங்கள் பாட்டினிலே
எழுந்து வந்தாய் ஐயப்பா
ஏட்டினிலே
எழுத வைத்தாய் ஐயப்பா
எங்கள் பாட்டினிலே
எழுந்து வந்தாய் ஐயப்பா
நாங்கள் பேட்டைத் துள்ளி
ஆடும் போது ஐயப்பா
பேட்டைத் துள்ளி
ஆடும் போது ஐயப்பா
நீ ஆட்டமாடி
வந்திடுவாய் ஐயப்பா
காடு மலை
கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண நாங்கள்
ஓடி வந்தோம் ஐயப்பா
நீலவிழி கண்ணனுக்கும்
நீரணிந்த ஈசனுக்கும்
பாலகனாய் அவதரித்த ஐயப்பா
நீலவிழி கண்ணனுக்கும்
நீரணிந்த ஈசனுக்கும்
பாலகனாய் அவதரித்த ஐயப்பா
வேலவனின் அருமைத் தம்பி
காலமெல்லாம் உனை வேண்டி
நீலிமலை சபரிமலை
ஏறிவந்தோம் ஐயப்பா
காடு மலை
கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண நாங்கள்
ஓடி வந்தோம் ஐயப்பா
மணிகண்டா
உன் கருணை அமுதமப்பா
உன் புன்னகையில்
புவனமெல்லாம் மயங்குதப்பா
மணிகண்டா
உன் கருணை அமுதமப்பா
உன் புன்னகையில்
புவனமெல்லாம் மயங்குதப்பா
மின்னும் காந்தமலையில்
ஜோதி தெரியுதப்பா
அப்பா மின்னும் காந்தமலையில்
ஜோதி தெரியுதப்பா
சபரி மன்னவனே
உன் மகிமை புரியுதப்பா
நெய்யபிஷேகம் பாலபிஷேகம்
தேனபிஷேகம் சாமிக்கே
சந்தனம் பன்னீர் அபிஷேகம்
எங்கள் ஐயப்ப சாமிக்கே
காடு மலை
கடந்து வந்தோம் ஐயப்பா
உனை காண நாங்கள்
ஓடி வந்தோம் ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா