Inbame Undhan Per Penmaiyo Song Lyrics

Idhayakkani Movie Inbame Undhan Per Penmaiyo Song Lyrics in Tamil Font. MGR Hit Inbame Undhan Per Penmaiyo Song Lyrics in Tamil.

படத்தின் பெயர்:இதயக்கனி
வருடம்:1975
பாடலின் பெயர்:இன்பமே உந்தன் பேர்
இசையமைப்பாளர்:MS விஸ்வநாதன்
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:TM சௌந்தரராஜன், P சுசீலா

பாடல் வரிகள்:

ஆண்: இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி

பெண்: இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக் கனி
நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

பெண்: சர்க்கரைப் பந்தல் நான்
தேன்மழை சிந்த வா
சர்க்கரைப் பந்தல் நான்
தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே
சாகச நாடகம் எங்கே

ஆண்: தேனொடு பால் தரும்
செவ்விழனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ

ஆண்: பஞ்சணை வேண்டுமோ
நெஞ்சணை போதுமே
பஞ்சணை வேண்டுமோ
நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண

பெண்: பொன்னொளி சிந்திடும் மெல்லிய
தீபத்தில் போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும்
ஜாடையில் பேசும் மந்திரம் என்ன
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

பெண்: மல்லிகைத் தோட்டமோ
வெண்பனிக் கூட்டமோ
மல்லிகைத் தோட்டமோ
வெண்பனிக் கூட்டமோ

ஆண்: மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
பெண்: மங்கள வாத்தியம் பொங்கிடும்
ஓசையில் மேகமும் வாழ்த்திசை பாடும்
ஆண்: மாளிகை வாசலில் ஆடிய
தோரணம் வான வீதியில் ஆடும்

ஆண்: இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி
நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி
பெண்: இன்பமே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *