Dhruva Natchathiram Movie Oru Manam Song Lyrics in Tamil Font. Oru Manam Nirka Solluthe Song Lyrics has penned in Tamil by Thamarai.
படத்தின் பெயர்: | துருவ நட்சத்திரம் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | ஒரு மனம் நிற்க சொல்லுதே |
இசையமைப்பாளர்: | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர்: | தாமரை |
பாடகர்கள்: | கார்த்திக், சாஷா திருப்பதி |
பாடல் வரிகள்:
ஆண்: ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
ஆண்: தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா
உறங்காமல் தேயவா
ஆண்: ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
ஆண்: ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்
ஆண்: ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
ஆண்: இன்னும் என்ன இடைவெளி
தூரம் மறுதளி
பக்கம் வந்தால் அனுமதி
போதும் அரை நொடி
ஆண்: ஓஹோ என்னை உன்னை பிரித்திடும்
காற்றில் கதகளி
மேலே நின்று சிரித்திடும்
மஞ்சள் நிலவொளி
பெண்: ஹா தீ மூட்டும் வானத்தை
திட்ட போகிறேன்
மழை வந்தும் காய்வதால்
முத்தம் தேடினேன்
பெண்: ஒரு புறம் நாணம் கிள்ளுதே
மறுபுறம் ஆசை தள்ளுதே
என்னை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
பெண்: தினசரி என்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
என் வீட்டை தேடி வா
உறங்காமல் தேயவா
ஆண்: வானம் பெய்ய கடவது
ஈரம் இனியது
பெண்: முத்தம் கொண்டு துடைப்பது
இன்னும் எளியது
ஆண்: உள்ளே தூங்கும் அனல் இது
உறக்கம் கலையுது
பெண்: எத்தனை நாட்கள் பொறுப்பது
ஏங்கி தவிக்குது
ஆண்: ஹோ நான் இன்று நான் இல்லை
நாணல் ஆகிறேன்
பெண்: லா லா லாலா
ஆண்: நதி போலே நீ சென்றால்
நானும் வளைகிறேன்
ஆண்: ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
ஆண்: தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
பெண்: என் வீட்டை தேடி வா
உறங்காமல் தேயவா
ஆண்: ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
ஆண்: ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்
சிறுகுறிப்பு:
துருவ நட்சத்திரம் என்பது விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி உளவு திரைப்படம் ஆகும். இதனை கௌதம் வாசுதேவமேனன் எழுதி இயக்கியுள்ளார். இதில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும் ஜோமன் டி.ஜான், சந்தனா கிருஷ்ணன் ரவிச்சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பு 2016-ம் ஆண்டு தொடங்கியது. இதன் திரையாக்கம் ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இப்படம் திரைக்கு வர தாமதமானது. மேலும் அறிய