Hey Sita Hey Rama Song Lyrics in Tamil and English from Sita Ramam Movie. Hey Sita Hey Rama Song Lyrics has penned in Tamil by Madhan Karky.
பாடல்: | ஹே சீதா ஹே ராமா |
---|---|
படம்: | சீதா ராமம் |
வருடம்: | 2022 |
இசை: | விஷால் சந்திரசேகர் |
வரிகள்: | மதன் கார்க்கி |
பாடகர்: | SPB சரண், சிந்தூரி |
Hey Sita Hey Rama Lyrics in Tamil
ஆண்: ஹே சீதா
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா
உன்னில் வசிக்க வாய்ப்பை தா
ஆண்: என்றும் பிரிந்திடா
வண்ணம் உந்தன் கையை
இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா
காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான்
நீங்காத உரிமை வேண்டும் தா
பெண்: ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா
ஹே ராமா
நிழல் அறிய வேண்டாமா
பெண்: நாளை நிகழ்ந்திடும்
காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா
நேற்றே எழுதிய
பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா
ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே
இருக்குமா சும்மா
ஆண்: ஹே சீதா
இந்த திரிக்கி தீயை தா
பெண்: ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா
ஆண்: கண்களை
கண்கள் கொய்கையில்
நெஞ்சில் வானவில் மான்களா
வார்த்தைகள்
மாயம் செய்கையில்
வானில் தூரிகை மீன்களா
பெண்: ஓ வலக்கண்ணில்
ஊஞ்சலாடும் மயக்கம்
இடக்கண்ணில்
தாயமாடும் தயக்கம்
பெண்: பாவம் நானென பாரடா
என்ன செய்குவேன் கூறடா
கொஞ்சும் சலங்கைகள்
விலங்கென ஆனால்
என் உலகம் என்னாகும்
பெண்: இரவிலே பேசும் தலையணை
அதற்கு உன் பெயர் சூட்டு நீ
உன்னை நான் கூடும் நாளில்
என் செய்வேன்
என்றுதான் காட்டினேன்
ஆண்: விழி நீ மூட
உன் கன்னம் தீண்டும்
தலையணை போல்
நான் வாழ வேண்டும்
ஆண்: மனதின் கூக்குரல் கேட்குமா
வலிகள் ஓவியம் ஆகுமா
உனை நான் அருகிலே கண்டு
உருகி வீழ்கையில்
அள்ளி கொள்ளம்மா
பெண்: ஹே ராமா
உயிர் உருக வேண்டாமா
நான் அள்ளி
அதை பருக வேண்டாமா
ஆண்: என்றும் பிரிந்திடா
வண்ணம் உந்தன் கையை
இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா
காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான்
நீங்காத உரிமை வேண்டும் தா
Sita Ramam Song Lyrics
Male: Hey Sitaa
Uyir Nuzhaiya Vaasal Thaa
Hey Sitaa
Unnil Vasikka Vaaipai Thaa
Male: Endrum Pirindhidaa
Vannam Undhan Kaiyai
Irukkiye Korka Thaa
Bhoomi Arindhidaa
Kaadhal Ondrai Tharuven
Nirappa Un Nenjam Thaa
Male: Thanimaiyil Unnai
Naan Neengaatha
Urimai Vendum Thaa
Female: Hey Ramaa
Enai Piriya Vendamaa
Hey Ramaa
Nizhal Ariya Vendamaa
Female: Naalai Nigazhnthidum
Kaatchi Ondrai Indre
Ezhuthu Kol Theettumaa
Netre Ezhuthiya
Paadal Ondrai Kaalam
Naalaiyum Meettumaa
Female: Ragasiya Neruppu Ondru
Ennulle Irukkumaa Summaa
Male: Hey Sitaa
Indha Thirikku Theeyai Thaa
Female: Hey Ramaa
Enai Piriya Vendamaa
Male: Kangalai Kangal Koigaiyil
Nenjil Vaanavil Maangalaa
Vaarthaigal Maayam Seigaiyil
Vaanil Thoorigai Meengalaa
Female: Oh Valakannil
Oonjalaadum Mayakkam
Ida Kannil
Thaayamaadum Thayakkam
Female: Paavam Naan Ena Paarada
Enna Seiguven Kooradaa
Konjam Salangaigal
Vilangena Aanaal
En Ulagam Ennaagum
Female: Iravile Pesum Thalaiyanai
Atharkku Un Peyar Soottinaen
Unnai Naan Koodum Naalil En Seiven
Endruthaan Kaattinen
Male: Vizhi Nee Mooda
Un Kannam Theendum
Thalaiyanai Pol
Naan Vaazha Vendum
Male: Manadhin Koo Kural Ketkumaa
Valigal Oviyam Aagumaa
Unai Naan Arugilae Kandu
Urugi Veezhgaiyil Alli Kollammaa
Female: Hey Ramaa
Uyir Uruga Vendamaa
Naan Alli
Adhai Paruga Vendamaa
Male: Endrum Pirindhidaa
Vannam Undhan Kaiyai
Irukkiyae Korka Thaan
Bhoomi Arindhidaa
Kaadhal Ondrai Tharuven
Nirappa Un Nenjam Thaa
Male: Thanimaiyil Unnai
Naan Neengaatha
Urimai Vendum Thaa