En Deivathukke Maaruvesama Song Lyrics in Tamil

En Deivathukke Maaruvesama Song Lyrics in Tamil from Sivakasi. En Dheivathukke Maaruvesama Song Lyrics Penned by Perarasu.

படத்தின் பெயர்:சிவகாசி
வருடம்:2005
பாடலின் பெயர்:என் தெய்வத்துக்கே மாறு வேஷமா
இசையமைப்பாளர்:ஸ்ரீகாந்த் தேவா
பாடலாசிரியர்:பேரரசு
பாடகர்கள்:முகேஷ்

பாடல் வரிகள்:

என் தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா
சொமந்த புள்ள பத்து மாசம் தான்
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா

ஆராரோ சொன்ன தாய் யாரோ
அட நான் யாரோ ஆனால் கோளாறோ
ஆராரோ சொன்ன தாய் யாரோ
அட நான் யாரோ ஆனால் கோளாறோ

செத்து பொழச்சு
நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உரிச்சு
நித்தம் பாலு கொடுப்பா

அவ வாழும் போது தள்ளி வைப்போம்
செத்த பின்னே கொள்ளி வைப்போம்
பிள்ளையாக பெத்ததுக்கு
என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா

என் தேவதைக்கு மாறு வேஷமா
சின்னராணிக்கிங்கே ஏழை வேஷமா
அண்ணன் முறை அப்பன் ஸ்தானம் தான்
அடி என்ன முறை இப்ப நானும்தான்

ஆராரோ ஆரி ஆராரோ
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ
ஆராரோ ஆரி ஆராரோ
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ

என்ன விதி என்ன விதி டா
என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா
அட என்ன சொல்ல என்ன சொல்லடா
சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா

பாசத்துக்கு பள்ளிக்கூடமா
அட பாடம் கத்து பாசம் வருமா
கல்லுக்குள்ளே சாமி வரும்டா
இங்கே சாமி பெத்தா கல்லு வரும்டா

அல்லும் பகலும்
நம்ம அள்ளி வளப்பா
தூக்கம் முழிச்சி
நித்தம் தூக்கம் கொடுப்பா

அல்லும் பகலும்
நம்ம அள்ளி வளப்பா
தூக்கம் முழிச்சி
நித்தம் தூக்கம் கொடுப்பா