Edhirthu Nil or Thirumbi Vaa Song Lyrics

Biriyani Movie Edhirthu Nil Song Lyrics in Tamil. Tamil Inspire Song Edhirthu Nil or Thirumbi Vaa Song Lyrics in Tamil. Thirumbi Vaa Lyrics.

படத்தின் பெயர்:பிரியாணி
வருடம்:2013
பாடலின் பெயர்:எதிர்த்து நில்
இசையமைப்பாளர்:யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்:கங்கை அமரன்
பாடகர்கள்:யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார்,
டி.இமான், விஜய் ஆண்டனி, எஸ்.தமன்

பாடல் வரிகள்:

திரும்பி வா உன் திசை எது
தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு
பார்த்திடு கோழை ஆகாதே

உன் இள ரத்தம்
அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை

எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கைகொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா

லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ

லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா

தன்னால் வருவதை ஏற்றுக்கொள்
உன் கால் பதிவுகள் அழியாது
வான்வெளி வரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது

விழித்தவன் தூங்கக் கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது
வாராத பொழுது
வருகிற பொழுது வாரிக்கொள்

தாராத ஒன்றை தருகிற நேரம்
வா பறந்து மண் மேல் இருந்து
விண் போல் உயர்ந்து

எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கைகொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா

ஒன்றே உறவென எண்ணிக்கொள்
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்
அன்பால் இணைத்தது விலகாது
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்

நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு
ஏதான போதும்
விடிகிற பொழுது மாறுமோ

எல்லோர்க்கும் இங்கே
இனி வரும் காலம்
ஆனந்தம்தான் ஆரம்பம்
இது நிரந்தரம்தான்

திரும்பி வா உன் திசை
எது தெரிந்தது மாறிப் போகாதே
வருவதை நீ எதிர்கொண்டு
பார்த்திடு கோழை ஆகாதே

உன் இள ரத்தம்
அது நித்தம் கொதிக்கட்டும்
எண்ணிய எண்ணம்
அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை
நீ அப்பனுக்குப் பிள்ளை

எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கைகொள் தடைகளே இல்லை
நிமிடம் ஏன் நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா

லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ

லாயில்லல்லா
லாயில்லல்லா லேயோ
நினைப்பதே வெற்றிதானே
எழுந்து வா

சிறுகுறிப்பு:

பிரியாணி என்பது 2013-ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை அதிரடி திரில்லர் படம் ஆகும். இதனை வெங்கட் பிரபு எழுதி இயக்கியுள்ளார். இதில் கார்த்தி மற்றும் ஹன்சிகா மோட்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி, நாசர், ராம்கி, சம்பத் ராஜ், மதுமிதா, ஜெயபிரகாஷ், பிரேம் மற்றும் மாண்டி தகார் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் 20 டிசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *