Punnagaiye Song Lyrics in Tamil

Ka Pae Ranasingam Movie 2020 Punnagaiye Song Lyrics in Tamil Font. Punnagaiye Song Tamil Lyrics has penned by Vairamuthu. Punnagaiye Tamil Lyrics.

படத்தின் பெயர்:க/பெ ரணசிங்கம்
வருடம்:2020
பாடலின் பெயர்:புன்னகையே
இசையமைப்பாளர்:ஜிப்ரான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:சுந்தரய்யர்

பாடல் வரிகள்:

புன்னகையே
சிறு பூங்கிளியே

புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு

புலி நீ… நீ…
புயல் நீ… நீ…
விதியா… யா…
சாதியா… யா…

அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது

புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு

துணை ஒன்னு இல்லாமலே
ஒத்த உசுரு அலைமோதுதே
எரியுற காட்டுக்குள்ளே
ஒரு எரும்பு வழிதேடுதே

பட்டிக்காட்டுப் பொண்ணு சொல்லு
பார்லிமென்டில் கேட்குமா
காட்டு சிங்கம் முயலக் காக்க
கடிதம் கொடுக்குமா

கஞ்சி போட்ட காக்கி சட்டை
கைத்தறிய பாக்குமா
வேலு நாச்சி வம்சக்காரி
வீரம் போகுமா
துணிஞ்ச தீ இது
குனிஞ்சு எரியுமா

புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு

புலி நீ… நீ…
புயல் நீ… நீ…
விதியா… யா…
சாதியா… யா…

அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது

புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு

இலக்கை அடையாமலே
இவள் இதயம் அடங்காதடா
விலங்கு உடையாமலே
இவள் வளையல் உடையாதடா

இவளும் கூட இந்திய ரத்தம்
அரசமைப்பு சொல்லுது
ஈ எறும்பும் வாழத்தானே
பூமி உள்ளது

அருங்கம்புல்லும் நனைய தானே
அந்த மேகம் பெய்யுது
அழுத ஜாதி மீளத் தானே
அரசு உள்ளது
அழுத பிள்ளை தான்
பால் குடிக்குது

புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு

புலி நீ… நீ…
புயல் நீ… நீ…
விதியா… யா…
சாதியா… யா…

அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது

புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு

சிறுகுறிப்பு:

க/பெ ரணசிங்கம் என்பது விருமண்டி எழுதி இயக்கிய தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான இசைத் துறையை ஜிப்ரான் கையாண்டுள்ளார். இப்படத்திற்கு வைரமுத்து பாடல்வரிகளை எழுதியுள்ளார். இப்படம் அக்டோபர் 2, 2020 அன்று ஜீ ப்ளேஸ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *