Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Ka Pae Ranasingam Movie 2020 Paravaigala Song Lyrics in Tamil Font. Paravaigala Song Tamil Lyrics has penned by Vairamuthu. Paravaigala Tamil Lyrics.

படத்தின் பெயர்:க/பெ ரணசிங்கம்
வருடம்:2020
பாடலின் பெயர்:பறவைகளா
இசையமைப்பாளர்:ஜிப்ரான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:மணிகண்டன் பெருபடப்பு

பாடல் வரிகள்:

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

நதி இல்லாத ஊரை
விட்டு ஓடி வந்தீக
மழை இல்லாத நாடு
தேடி வாழ வந்தீக

பாலும் தேனும் ஓடும்
என்று பாலை வந்தீக
ஈச்ச மரத்தில் வேப்பங்காயே
காய்க்கக் கண்டீக

பொண்டு புள்ள காங்காம
கண்ணு ஏங்குதே
வந்த வேலை தீராம வயசாகுதே
தொலைகாட்சியில் ஊர்
பார்க்கையில் உயிர் தேயுதே

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

சொந்த ஊரில் சொந்த பந்தம்
சோந்து நிக்குதுக
போன உசுரு வாரதெப்போ
பொலம்பி நிக்குதுக

வீட்டுக்காரன் வேட்டி சட்டை
நீவி பாக்குதுக
புள்ளை எல்லாம் பொம்மையோட
பேசி பாக்குதுக

வாழ்ந்த பூமி தொரத்தலையே
வறுமை தொரத்துதே
கடல் தண்ணி பிரிக்கலையே
காசு பிரிக்குதே
காகம் போகுது மேகம் போகுது
நாங்க போவோமா

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

உறவெல்லாம் வயிறு வளக்கவே
உயிரை விக்க போனீங்களா
உள்ளூரு ஆட்ட வித்துதான்
ஒட்டகத்த மேச்சீகளா
கண்ணீரில் சொந்தம் பொலம்புதே
கடல் தண்டி கேட்கும் தானா

பறவைகளா பறவைகளா
பசியெடுத்த பறவைகளா
பாழ்வெளியில் இறை தேடும்
பாலைவன பறவைகளா

சிறுகுறிப்பு:

க/பெ ரணசிங்கம் என்பது விருமண்டி எழுதி இயக்கிய தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான இசைத் துறையை ஜிப்ரான் கையாண்டுள்ளார். இப்படத்திற்கு வைரமுத்து பாடல்வரிகளை எழுதியுள்ளார். இப்படம் அக்டோபர் 2, 2020 அன்று ஜீ ப்ளேஸ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.