Dheera Dheera Song Lyrics in Tamil

Dheera Dheera Song Lyrics in Tamil from KGF 1 Movie. Dheera Dheera Song Lyrics has penned in Tamil by Madhura Kavi and Music by Ravi Basrur.

படத்தின் பெயர்கே.ஜி.எப் 1
வருடம்2018
பாடலின் பெயர்தீரா தீரா
இசையமைப்பாளர்ரவி பஸ்ரூர்
பாடலாசிரியர்மதுர கவி
பாடகர்கள்அனன்யா பட்,
மோகன் கிருஷ்ணா,
சந்தோஷ் வெங்கி

Dheera Dheera Lyrics in Tamil

ஆண்: அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
அங்க குருதியில் அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்காரா
கலியுகம் தாண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா

ஆண்: அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை
கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா
அங்க குருதியில் அடி முடி வேரில்
அனலை திரட்டும் தைரியக்கரா
கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா

ஆண்: கலியுகம் தீண்டி கடலாழம் தாண்டி
வந்தாயே நீ கரிகாலா

ஆண்: தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா

ஆண்: சீறும் பாம்பாய் படமெடுத்தாடி
சினமே காக்கும் மின்னொளி வீரா
எறிகழல் தீயை போர்க்களம் மாடி
எதிரியை தாக்கும் தாண்டவ சூரா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா

ஆண்: சீறும் பாம்பாய் படமெடுத்தாடி
சினமே காக்கும் மின்னொளி வீரா
எறிகழல் தீயை போர்க்களம் மாடி
எதிரியை தாக்கும் தாண்டவ சூரா
இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா

ஆண்: இடியினை கொட்டி தொடையினை தட்டி
வென்றாயே நீ கரிகாலா

பெண்: மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்
மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்
தடைகள் எதையும் மகனே வென்று வா
தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா

பெண்: தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா

ஆண்: தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா
தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா
வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாலா

5 thoughts on “Dheera Dheera Song Lyrics in Tamil”

  1. Can the author please correct வால் to வாள்? It coule be a typo but of epic proportions!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *