Devathaiye Va Va Song Lyrics in Tamil

Devathaiye Va Va Song Lyrics from Malaikottai Tamil Movie. Devathaiye Va Va Song Lyrics has penned in Tamil by Yugabharathi.

படத்தின் பெயர்:மலைக்கோட்டை
வருடம்:2007
பாடலின் பெயர்:தேவதையே வா வா
இசையமைப்பாளர்:மணி சர்மா
பாடலாசிரியர்:யுகபாரதி
பாடகர்கள்:விஜய் யேசுதாஸ்

பாடல் வரிகள்:

தேவதையே வா வா
என் தேவதையே வா வா
உன் இரு விழி அசைவினில்
எழுதிடும் கவிதை நான்

பூமாலையே வா வா
என் பூமாலையே வா வா
உன் விரல் தொடும் தொலைவினும்
விழுகிற அருவி நான்

நீரிளில்லாமல் மீன்களும்
வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவையிலும் சிறகென பறந்திடும்

தேவதையே வா வா
என் தேவதையே வா வா
உன் இரு விழி அசைவினில்
எழுதிடும் கவிதை நான்

விளையும் பூமி தநீரை
விலக சொல்லாது
அலைகடல் சென்று பாயாமல்
நதிகள் ஓயாது

சிதைவுகள் இல்லை என்றாலே
சிலைகள் இங்கேது
வருவதை எல்லாம் ஏற்காமல்
போனால் வாழ்வேது

பாதை தேடும் கால்கள் தான்
ஊரை சேரும்
குழலை சேரும் தென்றல் தான்
கீதம் ஆகும்

சுற்றும் இந்த பூமியை
சுழல செய்த காதலை
கற்று கொண்டேன் உன்னிடம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை

ஆடை மலை நம்மை தொட்டாலே
வெயிலே வாவென்போம்
அனலாய் வெயில் சுட்டாலே
மலையே தூவென்போம்

தனிமைகள் தொல்லை தந்தாலே
துணையை கேட்கின்றோம்
துணை வரும் நெஞ்சை கொள்ளாமல்
தனியே தேய்கின்றோம்

ஆசை மட்டும் இல்லையேல்
ஏது நாட்கள்
கைகள் தொட்டு சூடவே
காதல் பூக்கள்

கண்ணை விற்று ஓவியம்
வாங்கும் இந்த ஊரிலே
அன்பை வைத்து வாழலாம்
சுகம் என தினம் சுமைகளில் மகிழ்ந்திரு

தேவதையே வா வா
என் தேவதையே வா வா
உன் இரு விழி அசைவினில்
எழுதிடும் கவிதை நான்

பூமாலையே வா வா
என் பூமாலையே வா வா
உன் விரல் தொடும் தொலைவினும்
விழுகிற அருவி நான்

நீரிளில்லாமல் மீன்களும்
வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவையிலும் சிறகென பறந்திடும்