Devathai Vamsam Neeyo Song Lyrics in Tamil from Snegithiye. Devathai Vamsam Neeyo Song Lyrics penned in Tamil by Pa.Vijay.
படத்தின் பெயர்: | சிநேகிதியே |
---|---|
வருடம்: | 2000 |
பாடலின் பெயர்: | தேவதை வம்சம் நீயோ |
இசையமைப்பாளர்: | வித்யாசாகர் |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகர்கள்: | KS சித்ரா, சுஜாதா மோகன் |
பாடல் வரிகள்:
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ
நட்சத்திர புள்ளி
வானம் எங்கும் வைத்து
நிலவுன்னை கோலம்
போட அழைத்திடும்
நீ இருக்கும் இடம்
வேடந்தாங்கல் என்று
பறவைகள் மனதுக்குள்
மகிழ்ந்திடும்
பெண்பூவே நீயும் ஆட
முகில்கள் ஊஞ்சல் போடும்
உலாவும் தென்றல் வந்து
உன் ஊஞ்சலை அசைத்தே போகும்
பகலினில் முழுவதும் வெயிலினிலே
உனை சுட்டு வருந்திய வானம் அது
இரவினில் முழுவதும் அதை எண்ணியே
பனித்துளி சிந்தியே அழுகிறது
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
வாழ்வின் திசை மாறும்
பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம்
இன்றி தொடருமே
சொந்தம் நூறு வரும்
வந்து வந்து போகும்
என்றும் உந்தன் நட்பு
மட்டும் வேண்டுமே
உன் பாதம் போகும் பாதை
மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம்
குயிலுக்கு ஆனந்தங்கள்
பூக்கள் எல்லாம் உன்னை
தொட தவமிருக்கும்
நீயும் தொட சருகுக்கும்
உயிர் பிறக்கும்
வானவில்லும் வந்துனக்கு
குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே
இடம் இருக்கும்
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ