Aararo Paada Ingu Song Lyrics in Tamil from Aadhalal Kadhal Seiveer Movie. Aararo Paada Ingu Song Lyrics penned in Tamil by Na Muthukumar.
படத்தின் பெயர்: | ஆதலால் காதல் செய்வீர் |
---|---|
வருடம்: | 2013 |
பாடலின் பெயர்: | ஆராரோ பாட இங்கு |
இசையமைப்பாளர்: | யுவன் ஷங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்: | யுவன் ஷங்கர் ராஜா |
Aararo Paada Ingu Lyrics in Tamil
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை
என் அன்பே என் அமுதே
இந்த காயம் ஆறிவிடும் தூங்கு
என் கண்ணே என் மணியே
உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
கடவுளின் உருவம் எதுவென மழலை
சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்
சேற்றிலே வளர்ந்த தாமரை
மலரைப் போலவே நீ தோன்றினாய்
பூமியிது புனிதமில்லை
ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது
தீயிலுமே நீந்தி வர நீ
இன்று கற்றுக்கொள் நல்லது
இந்த உலகம் என்பது
இன்பதுன்பம் உள்ள பாதையடா
நீ முட்டிமோதி எழ
வழிகள் சொல்லித்தரும் கீதையடா
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நதியிலே விழுந்த இலையென
உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்
அலைவரும் அடுத்த திருப்பத்தில்
உனது கரை எதிரிலே தோன்றிடும்
வேர் எங்கோ செடி எங்கோ
நீ இங்கே தனியாய் பூக்கிறாய்
வழிதவறி வீட்டில் வந்த
பறவையைப் போலவே பார்க்கிறாய்
நீ கடவுள் எழுதி வைத்த
மண்ணில் வந்த ஒரு கவிதையடா
அதன் இடையில் இரு உயிர்கள்
செய்த எழுத்துப்பிழை பாவமடா
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை