Aalaporan Thamizhan Song Lyrics in Tamil from Mersal Movie. Aalaporan Thamizhan or Alaporan Tamilan Song Lyrics penned in Tamil by Vivek.
படத்தின் பெயர் | மெர்சல் |
---|---|
வருடம் | 2017 |
பாடலின் பெயர் | ஆளப்போறான் தமிழன் |
இசையமைப்பாளர் | ஏ.ஆர்.ரகுமான் |
பாடலாசிரியர் | விவேக் |
பாடகர்கள் | தீபக், சத்யபிரகாஷ், கைலாஷ் கேர், பூஜா ஏவி |
பாடல் வரிகள்:
குழு: ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாறான் மீச முறுக்கு
ஹோய் எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு
குழு: முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
குழு: எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
ஆண்: ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான்
இனிமே எல்லாமே
ஆண்: வீரன்னா யாருனு
இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும்
அட நீதிய அவன் தந்தானே
குழு: சொல்லிச் சொல்லி
ஆண்: சாித்திரத்தில் போ்
பொறிப்பான்
குழு: நெஞ்சில் அள்ளி
ஆண்: காதில் நம்ம தேன்
தமிழ்தெளிப்பான்
குழு: இன்னும்
ஆண்: உலகம் எழ
குழு: தங்க
ஆண்: தமிழப்பாட
குழு: பச்சத்தமிழ்
உச்சிப்புகழ் ஏறி சிறக்கும்
ஆண்: வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ வம்பா வந்தா
பெண்: சுளுக்கெடுப்போம்
ஆண்: தமிழன்டா எந்நாளும்
சொன்னாலே திமிரேறும்
காத்தோட கலந்தாலும்
அதுதான் உன் அடையாளம்
ஆண்: ஹே அன்பைக் கொட்டி
எங்கமொழி அடித்தளம் போட்டோம்
லகுனத்த தாிக்கிற
ழகரத்தை சோ்த்தோம்
ஆண்: தலைமுறை கடந்துமே
விாிவதைப் பாத்தோம்
உலகத்தின் முதல்மொழி
உசுரெனக் காத்தோம்
ஆண்: நாள்நகர மாற்றங்கள் ஏதும்
உன் மொழி சாயும் என்பானே
பாாிழைய தமிழனு வருவான்
தாய்த்தமிழ் தூக்கி விம்பானே
குழு: கடைசித் தமிழனின்
ரத்தம் எழும்
வீழாதே… தமிழினமே…
வீழாதே… தமிழினமே…
குழு: முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
குழு: எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
பெண்: நெடுந்தூரம் ஓ இசை கேட்கும்
பிறை நீட்டி பௌா்ணமியாக்கும்
வேதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிா் அழியும் நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசலில் சேக்கும்
ஆஆஆ…..
குழு: முத்துமணி ரத்தினத்த
பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழ தண்டு
அம்மனுக்கும் சம்மதம்
குழு: எந்த நேரம் கண்டாலும்
கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு
காவலா நீ வரணும்
குழு: ஆளப்போறான் தமிழன்
உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான்
இனிமே எல்லாமே
ஆண்: வீரன்னா யாருனு
இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும்
அட நீதிய அவன் தந்தானே ஹே
ஆண்: வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ வம்பா வந்தா
பெண் : சுளுக்கெடுப்போம்
குழு: தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும்
தமிழாலே ஒண்ணானோம்
ஆறாது எந்நாளும்
குறிப்பு:
மெர்சல் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ஆகும். இதனை அட்லீ எழுதி இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் வடிவேலு ஆகியோருடன் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க, அனைத்து பாடல் வரிகளையும் விவேக் எழுதியுள்ளார். மேலும் அறிய