Vilakke Thiruvilakke Song Lyrics in Tamil

Vilakke Thiruvilakke Song Lyrics in Tamil from Kamakshi Amman Pamalai. Vilakke Thiruvilakke or Deeba Stothram Song Lyrics by Bhavadharani.

பாடல் வரிகள்:

விளக்கே திருவிளக்கே
வேந்தன் உடன்பிறப்பே
ஜோதிமணி விளக்கே
ஸ்ரீதேவி பொன்மணியே

அந்திவிளக்கே
அலங்கார நாயகியே
காந்தி விளக்கே
காமாக்ஷி தாயாரே

பசும்பொன் விளக்கு வைத்து
பஞ்சு திரி போட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்

ஏற்றினேன் நெய்விளக்கு
எந்தன் குடி விளங்க
வைத்தேன் திரு விளக்கு
மாளிகையும் தான் விளங்க

மாளிகையில் ஜோதி உள்ள
மாதாவை கண்டு கொண்டேன்
மாதாவை கண்டு கொண்டேன்

மாங்கல்ய பிச்சை
மடி பிச்சை தாருமம்மா
சந்தான பிச்சையுடன்
தனங்களும் தாருமம்மா

பெட்டி நிறைய
பூஷணங்கள் தாருமம்மா
கொட்டில் நிறைய
பசுமாடு தாருமம்மா

புகழுடம்பு தந்து எனக்கு
பக்கத்தில் நில்லுமம்மா
அகத்தெளிவு தந்து எனக்கு
அகத்தினுள்ளே இருமம்மா
அகத்தினுள்ளே இருமம்மா

சேவித்து எழுந்தேன்
தேவி வடிவம் கண்டேன்
வஜ்ர கிரீடம் கண்டேன்
வைடூர்ய மேனி கண்டேன்

முத்து கொண்டை கண்டேன்
முழு பச்சை மாலை கண்டேன்
சௌரி முடி கண்டேன்
தாழை மடல் சூடக்கண்டேன்

பின்னல் அழகு கண்டேன்
பிறை போல் நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்
தாயார் வடிவம் கண்டேன்

கமலத் திரு முகத்தில்
கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன
மாலையசைய கண்டேன்
மாலையசைய கண்டேன்

தந்தையும் தாயும் நீயே
தந்தையும் தாயும் நீயே
தயவுடனே ரட்சிப்பாயே

கைவளையல் கலகலென்ன
கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென்ன
ஜொலிக்கக் கண்டேன்

காலிற்சிலம்பு கண்டேன்
காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை
மனம் குளிர கண்டு கொண்டேன்
மனம் குளிர கண்டு கொண்டேன்

அன்னையே அருள் துணையே
அருகிருந்து காத்திடுவாய்
அன்னையே அருள் துணையே
அருகிருந்து காத்திடுவாய்

வந்த வினையகற்றி
மகா பாக்கியம் தந்திடுவாய்
கொடும்ப கொடி விளக்கே
குற்றங்கள் பொறுத்திடுவாய்
குறைகள் தீர்த்திடுவாய்
குடும்பத்தை காத்திடுவாய்

கருணை கடல் நீயே
கற்பக வள்ளி நீயே
கருணை கடல் நீயே
கற்பக வள்ளி நீயே

சகலகலா வள்ளி நீயே
தஞ்சம் உனை அடைந்தேன்
தாயே தாயே ரட்சிப்பாயே
துக்கம் எல்லாம் போக்கிடம்மா
அபிராம வள்ளியம்மா
அடைக்கலம் நீயே அம்மா

ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பிகே
தேவி நாராயணி நமோஸ்துதே

ஆயுர் தேவி தனம் தேவி
வித்யாம் தேவி மகேஸ்வரி
சமஸ்த மகிழாம் தேவி
வேண்டினேன் பரமேஸ்வரி

சமஸ்த மகிழாம் தேவி
வேண்டினேன் காமாட்சி
சமஸ்த மகிழாம் தேவி
வேண்டினேன் காமாட்சி
காமாட்சி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *