Velli Malare Song Lyrics in Tamil from Jodi Movie. Velli Malare Song Lyrics are penned in Tamil by Vairamuthu. Velli Malare Tamil Lyrics.
படத்தின் பெயர்: | ஜோடி |
---|---|
வருடம்: | 1999 |
பாடலின் பெயர்: | வெள்ளி மலரே |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | SP பாலசுப்ரமணியம், மஹாலட்சுமி ஐயர் |
Velli Malare Lyrics in Tamil
பெண்: வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
பெண்: நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
பெண்: இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ
தேன்சிதறும் மன்மத மலரே
இன்றே சொல்வாயோ
ஆண்: இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று
இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன்
கூந்தல் சோ்வதற்கு
ஆண்: இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று
இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன்
கூந்தல் சோ்வதற்கு
ஆண்: வெள்ளி மலரே வெள்ளி மலரே
ஆண்: மின்னொளியில் மலா்வன
தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலா்வன
காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
பெண்: ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு
வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும்
பேதமில்லை
ஆடைகொள்ளப் பாா்ப்பீா்
ஐயோ தள்ளி நில் நில்
ஆண்: வான்விட்டு வாராய்
சிறகுள்ள நிலவே
தேன்விட்டுப் பேசாய்
உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிா்த்தேன்
சொட்டுதே சொட்டுதே
பெண்: வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
பெண்: வனங்களில் பூந்தளிா்
தேடும்போதும்
நதிகளில் நீா்
குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
ஆண்: தொலைவினில்
தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல
ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா
நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
பெண்: மழையிலும் கூவும்
மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும்
புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும்
இன்னொரு உயிா் நான்
ஆண்: வெள்ளி மலரே வெள்ளி மலரே
பெண்: நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
பெண்: இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ
தேன்சிதறும் மன்மத மலரே
இன்றே சொல்வாயோ
ஆண்: இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று
இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன்
கூந்தல் சோ்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே