Varar Ayya Varar Karuppasamy Vararu Song Lyrics

Varar Ayya Varar Karuppasamy Vararu Song Lyrics from Karuppasamy Songs. Varar Ayya Varar Karuppasamy Vararu Song Lyrics sung by Thulasidhas.

Varar Ayya Vararu Song Lyrics

வாராரய்யா வாராரு
நம்ம கருப்பசாமி வாராரு
வானத்துக்கும் பூமிக்கும்
புது வடிவம் தாங்கி வாராரு

வீச்சருவா கையில ஏந்தி
வேகமாக வாராரு
வீச்சருவா கையில ஏந்தி
வேகமாக வாராரு

வீரபத்திரசாமி கூட
விறுவிறுனு வாராரு
வீரபத்திரசாமி கூட
விறுவிறுனு வாராரு

வாராரய்யா வாராரு
நம்ம கருப்பசாமி வாராரு
வாராரய்யா வாராரு
நம்ம கருப்பசாமி வாராரு

காடு மலை மேடுகளை
கடந்து நடந்து வாராரு
கண்ணு முழிய உருட்டினாலும்
கருணை கொண்டு தாராரு

செவக்க செவக்க வெத்தலை போட்டு
சிரிச்சுக்கிட்டே வாராரு
செவக்க செவக்க வெத்தலை போட்டு
சிரிச்சுக்கிட்டே வாராரு

சின்ன கருப்பும் பெரிய கருப்பும்
சேர்ந்து வர வாராரு
சின்ன கருப்பும் பெரிய கருப்பும்
சேர்ந்து வர வாராரு

வாராரய்யா வாராரு
நம்ம கருப்பசாமி வாராரு
வாராரய்யா வாராரு
நம்ம கருப்பசாமி வாராரு

நாட்டுல இருக்கும் மக்களை எல்லாம்
பாத்து போக வாராரு
நல்லவன் கெட்டவன் செயல பாத்து
பலன் கொடுக்க போறாரு

நாட்டுல இருக்கும் மக்களை எல்லாம்
பாத்து போக வாராரு
நல்லவன் கெட்டவன் செயல பாத்து
பலன் கொடுக்க போறாரு

தப்பு செஞ்ச யாருக்குமே
ஜாமீன் கொடுக்க மாட்டாரு
எங்க ஐயா…
தப்பு செஞ்ச யாருக்குமே
ஜாமீன் கொடுக்க மாட்டாரு

நேர்மையாக இருப்பவரை
கைவிடவே மாட்டாரு
நேர்மையாக இருப்பவரை
கைவிடவே மாட்டாரு

வாராரய்யா வாராரு
நம்ம கருப்பசாமி வாராரு
வாராரய்யா வாராரு
நம்ம கருப்பசாமி வாராரு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *