Vatta Nalla Pottu Vachu Song Lyrics in Tamil from Ayyappan Songs. Vatta Nalla Pottu Vachu Song Lyrics has sung by Thekkampatti Sundarrajan.
Vatta Nalla Pottu Vachu Lyrics in Tamil
வட்ட நல்ல வட்ட நல்ல பொட்டு வச்சு
வடிவழகா இருப்பவனே
வரிப்புலி வாகனனே ஐயப்பா
வந்து உன்ன பாக்க வாரோம் ஐயப்பா
எத்தனையோ மலை இருக்க
அத்தனையும்தான் கடந்து
எத்தனையோ மலை இருக்க
அத்தனையும்தான் கடந்து
சபரிமலை ஆண்டவனே ஐயப்பா
சன்யாசியாய் நின்றவனே மெய்யப்பா
உச்சி மலைதனிலே
ஒய்யாரமாய் அமர்ந்தவனே
உச்சி மலைதனிலே
ஒய்யாரமாய் இருப்பவனே
பச்சை மார் வடிவழகா ஐயப்பா
பரதேசியாய் நாங்க வாரோம் ஐயப்பா
கண்ணனும் சிவனும் சேர
கைதனிலே பிறந்தவனே
கண்ணனும் சிவனும் சேர
கைதனிலே பிறந்தவனே
ஐயப்ப தெய்வமான ஐயப்பா
காந்தமலை ஜோதியான மெய்யப்பா
எருமேலி பேட்டை துள்ளி
பம்பையிலே தீர்த்தம் ஆடி
எருமேலி பேட்டை துள்ளி
பம்பையிலே தீர்த்தம் ஆடி
நீலிமலை ஏத்தத்துலே ஐயப்பா
நிக்க வச்சு சொக்க வைப்பாய் ஐயப்பா
எங்களை நிக்க வச்சு
சொக்க வைப்பாய் ஐயப்பா
வட்ட நல்ல வட்ட நல்ல பொட்டு வச்சு
வடிவழகா இருப்பவனே
வரிப்புலி வாகனனே ஐயப்பா
வந்து உன்ன பாக்க வாரோம் ஐயப்பா
ஐயப்பா உன்ன பாக்க வாரோம் ஐயப்பா