Vandu Vizhi Kannazhagi Song Lyrics in Tamil

Vandu Vizhi Kannazhagi Song Lyrics in Tamil from Nesavu Kondattam. Vandu Vizhi Kannazhagi Song Lyrics has penned in Tamil by Rajalakshmi.

படத்தின் பெயர்:நெசவு கொண்டாட்டம்
வருடம்:2019
பாடலின் பெயர்:வண்டு விழி கண்ணழகி
இசையமைப்பாளர்:சாய்சரண்
பாடலாசிரியர்:ராஜலட்சுமி
பாடகர்கள்:செந்தில் கணேஷ், ராஜலட்சுமி

Vandu Vizhi Kannazhagi Lyrics in Tamil

ஆண்: வண்டு விழி கண்ணழகி
வாழைத்தண்டு காலழகி
கட்டிக்கடி மாமனதான்
கண்ண செவப்பழகி

பெண்: குண்டு முழி கண்ணழகா
கும்மிருட்டு தோலழகா
எட்டி நின்னு ஆளவிடு
இழுச்ச வாயழகா

ஆண்: வண்டு விழி கண்ணழகி
வாழைத்தண்டு காலழகி
கட்டிக்கடி மாமனதான்
கண்ண செவப்பழகி

பெண்: குண்டு முழி கண்ணழகா
கும்மிருட்டு தோலழகா
எட்டி நின்னு ஆளவிடு
இழுச்ச வாயழகா

ஆண்: பட்டியில நெஞ்சு வச்ச
பட்டு மெத்தை காத்திருக்கு
பச்சை கிளி பக்கம் வாயேண்டி

பெண்: ஆடு வெட்டும் வீச்சருவா
அடுப்படியில் தான் இருக்கு
ஒட்டாம நீ எட்டி நில்லயா

ஆண்: ஏய் வாடி
பெண்: வரமாட்டேன்யா
ஆண்: தாடி
பெண்: தரமாட்டேன்யா
ஆண்: ஏங்கி
பெண்: வழியாதைய்யா
ஆண்: வாடி
பெண்: போயா

பெண்: உன்ன
ஆண்: விடமாட்டேன்டி
பெண்: கொன்னா
ஆண்: நான் பொறப்பேன்டி
பெண்: என்ன?
ஆண்: நீ என் ஜோடி
ஆண்: வாடி
பெண்: போயா

ஆண்: பட்டு நூல் சுத்துன கையி
கட்டு கட்டா காய்ச்சிருக்கே
பட்ட காயம் ஆறும் படி
தொட்டு ஒரு முத்தம் தரவா

பெண்: நூல திரிக்கும் கையால்
ஆள திருச்சிருவேன்
வாய இறுக்கி கட்டு
வால நறுக்கிருவேன்

ஆண்: பட்டிக்காட்டான் கெட்டிக்காரன்
ஏன் வெட்டி பேசுறடி
பெண்: பட்டுநூல கட்டி இழுத்தா
கைய அறுக்குமைய்யா

ஆண்: ஏய் வாடி
பெண்: வரமாட்டேன்யா
ஆண்: தாடி
பெண்: தரமாட்டேன்யா
ஆண்: ஏங்கி
பெண்: வழியாதைய்யா
ஆண்: வாடி
பெண்: போயா

பெண்: உன்ன
ஆண்: விடமாட்டேன்டி
பெண்: கொன்னா
ஆண்: நான் பொறப்பேன்டி
பெண்: என்ன?
ஆண்: நீ என் ஜோடி
ஆண்: வாடி
பெண்: போயா

ஆண்: வாடி
பெண்: போயா
ஆண்: வாடி
பெண்: போயா

ஆண்: சுத்துகிற ராட்டைய போல்
சுத்துறேன்டி உன்னால
திட்டித்திட்டி பேசுனாலும்
தித்திக்கிதே தன்னால

பெண்: ஊடுருவும் நாடாவா
ஓடுறியே உள்ளூரே
ஊருசனம் பாத்திருமே
கிட்ட வந்து கொல்லாத

ஆண்: சொல்லக்கேட்டா கள்ளப்போல
போதை ஏறுதடி
பெண்: கொட்டும் மோகத்தை கட்டிவையி
தாழி ஏறனுமே

ஆண்: ஏய் வாடி
பெண்: வரமாட்டேன்யா
ஆண்: தாடி
பெண்: தரமாட்டேன்யா
ஆண்: ஏங்கி
பெண்: வழியாதைய்யா
ஆண்: வாடி
பெண்: போயா

பெண்: உன்ன
ஆண்: விடமாட்டேன்டி
பெண்: கொன்னா
ஆண்: நான் பொறப்பேன்டி
பெண்: என்ன?
ஆண்: நீ என் ஜோடி
ஆண்: வாடி
பெண்: போயா

ஆண்: வண்டு விழி கண்ணழகி
வாழைத்தண்டு காலழகி
கட்டிக்கடி மாமனதான்
கண்ண செவப்பழகி

பெண்: குண்டு முழி கண்ணழகா
கும்மிருட்டு தோலழகா
எட்டி நின்னு ஆளவிடு
இழுச்ச வாயழகா

ஆண்: ஏய் வாடி
பெண்: வரமாட்டேன்யா
ஆண்: தாடி
பெண்: தரமாட்டேன்யா
ஆண்: ஏங்கி
பெண்: வழியாதைய்யா
ஆண்: வாடி
பெண்: போயா

பெண்: உன்ன
ஆண்: விடமாட்டேன்டி
பெண்: கொன்னா
ஆண்: நான் பொறப்பேன்டி
பெண்: என்ன?
ஆண்: நீ என் ஜோடி
ஆண்: வாடி
பெண்: போயா

ஆண்: ஏய் வாடி
பெண்: வரமாட்டேன்யா
ஆண்: தாடி
பெண்: தரமாட்டேன்யா
ஆண்: ஏங்கி
பெண்: வழியாதைய்யா
ஆண்: வாடி
பெண்: போயா

பெண்: உன்ன
ஆண்: விடமாட்டேன்டி
பெண்: கொன்னா
ஆண்: நான் பொறப்பேன்டி
பெண்: என்ன?
ஆண்: நீ என் ஜோடி
ஆண்: வாடி
பெண்: போயா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *