Valvu Anaval Durga Song Lyrics in Tamil

Devi Durgaye Jaya Devi Durgaye or Valvu Anaval Durga Song Lyrics in Tamil. Sri Durga Ashtakam or Valvu Anaval Durga Song Lyrics in Tamil.

Sakalakalavalli Maalai Song LyricsMangala Roopini Song Lyrics
Saraswathi 108 Ashtothram LyricsSaraswathi 108 Potri Lyrics

Valvu Anaval Durga Lyrics in Tamil

வாழ்வுமானவள்
துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள்
இந்த மண்ணில் வந்தனள்

தாழ்வு அற்றவள்
துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே
என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே

உலகையீன்றவள்
துர்கா உமையுமானவள்
உண்மையானவள்
எந்தன் உயிரைக் காப்பவள்

நிலவில் நின்றவள்
துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள்
எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே

செம்மையானவள்
துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள்
அன்பு தந்தையானவள்

இம்மையானவள்
துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள்
என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே

உயிருமானவள்
துர்கா உடலுமானவள்
உலகமானவள்
எந்தன் உடமையானவள்

பயிருமானவள்
துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட
என்னுள் பழுத்த துர்கையே

தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே

துன்பமற்றவள்
துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள்
இன்ப தோணியானவள்

அன்பு உற்றவள்
துர்கா அபயவீடவள்
நன்மை தங்கிட
என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே

குருவுமானவள்
துர்கா குழந்தையானவள்
குலமுமானவள்
எங்கள் குடும்ப தீபமே

திருவுமானவள்
திரிசூலி மாயவள்
திருநீற்றில் நின்றிட
என்னுள் திகழும் துர்கையே

தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே

ராகு தேவனின்
பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில்
என்னைத் தேடி வருபவள்

ராகு காலத்தில்
எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே
என்னைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே

கன்னி துர்கையே
இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே
வீர சுகன துர்கையே

அன்னை துர்கையே
என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே
ஜெய துர்கை துர்கையே

தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே
ஜெய தேவி துர்கையே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *