Unnai Paartha Pinbu Naan Song Lyrics

Unnai Paartha Pinbu Naan Song Lyrics from Kadhal Mannan Tamil Movie. Unnai Paartha Pinbu Naan Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:காதல் மன்னன்
வருடம்:1998
பாடலின் பெயர்:உன்னைப் பார்த்த
இசையமைப்பாளர்:பரத்வாஜ்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம்

பாடல் வரிகள்:

உன்னைப் பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே

எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்

கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று
கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும்
வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே

உன்னைப் பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே

ஏன் பிறந்தேன் என்று
நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன்
உண்மை நான் அறிந்தேன்

என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில்
நான் கண்டு கொண்டேன்

எத்தனை பெண்களைக்
கடந்திருப்பேன்
இப்படி என் மனம்
துடித்ததில்லை

இமைகள் இரண்டையும்
திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில்
நியாயமில்லை

நீ வருவாயோ
இல்லை மறைவாயோ
ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
தன்னைத் தருவாயோ
இல்லை கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே

நீ நெருப்பு என்று
தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன்
என்ன துணிச்சலடி

மணமகளாய் உன்னைப்
பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க
மனம் துடிக்குதடி

மரபு வேலிக்குள்
நீ இருக்க
மறக்க நினைக்கிறேன்
முடியவில்லை

இமயமலை என்று
தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ
அடங்கவில்லை

நீ வருவயோ
இல்லை மறைவாயோ
ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
தன்னைத் தருவாயோ
இல்லை கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான்
இதுபோல இல்லையே

எவளோ எவளோ என்று
நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று
இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்

கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று
கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும்
வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு நான்
நானாக இல்லையே